Jio Finance: ரூ.24 சேவைக்கு பின்னால் இவ்வளவு பெரிய விஷயம் இருக்கா? முகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்..!!

இந்தியாவின் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ்-ன் நிதி சேவை பிரிவான ஜியோ ஃபைனான்ஸ் ஆப் மூலம் வருமான வரி அறிக்கை (ஐடிஆர்) தாக்கல் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது எல்லோருக்கும் தெரியும். இந்த சேவை, சாதாரண மக்களுக்கும் மிகவும் எளிதான மற்றும் குறைந்த செலவில் வரி தாக்கல் செய்ய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜியோ ஃபைனான்ஸ் தளத்தில் நீங்கள் சுயமாக வருமான வரியை தாக்கல் செய்ய வெறும் 24 ரூபாய் செலுத்தினால் போதும், அதுவும் AI கருவிகளுடன் இணைந்து எளிதாக வருமான வரி தாக்கல் செய்ய முடியும். ஆனால் நிபுணரின் உதவியுடன் தாக்கல் செய்ய விரும்பினால் நீங்கள் ரூ.999 செலுத்தி ITR தாக்கல் செய்ய வேண்டும்.

Jio Finance: ரூ.24 சேவைக்கு பின்னால் இவ்வளவு பெரிய விஷயம் இருக்கா? முகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்

மியூச்சவல் பண்டில் முதலீட்டு சேவையை துவங்கியுள்ள ஜியோ ஃபைனான்ஸ் புதிதாக வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. எதற்காக திடிரென இத்தகைய சேவையை வெறும் 24 ரூபாய் விலையில் அறிமுகம் செய்ய வேண்டும் இதற்கு பின்னால் இருப்பது என்ன..?

ஜியோவின் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்ட காலம் தான் மிகவும் முக்கியமானது, ஐடிஆர் தாக்கல் செய்ய செப்டம்பர் 15ஆம் தேதி கடைசி நாளாக இருக்கும் வேளையில், பல கோடி மக்கள் இன்னும் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யாமல் இருக்கும் சூழ்நிலையில் குறைந்த கட்டணத்தில் TaxBuddy உடன் இணைந்து இச்சேவையை அறிமுகம் செய்துள்ளது.

ஜியோவின் இந்த ரூ.24 திட்டம், சம்பளம் அல்லது ஓய்வூதிய வருமானம் கொண்ட தனிநபர்களுக்கான அடிப்படை ஐடிஆர்-1 (சஹாஜ்) தாக்கலுக்கு ஏற்றதாக உள்ளது. ஜியோவின் இந்த குறைந்த விலை சேவை லாப நோக்கத்தில் அல்ல என்பது தெளிவாக தெரிகிறது. காரணம் 24 ரூபாய் என்பது பேமென்ட் கேட்வே கட்டணங்களுக்கு கூட ஈடாகாது.

இச்சேவை அறிமுகம் செய்ய உண்மையான நோக்கம், பயனர்களின் நிதி தரவுகளை சேகரிப்பதே என பின்ஷாட்ஸ் தெரிவித்துள்ளது. ஒரு தனிநபரின் வருமானம், செலவுகள், முதலீடுகள் மற்றும் குடும்ப விவரங்கள் போன்ற மதிப்புமிக்க வருமானம் மற்றும் வரி சார்ந்த தகவல்களை இந்த வருமான வரி தாக்கல் சேவையின் மூலம் பெறும். இதன் வாயிலாக ஜியோ பைனான்ஸ் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் தனிப்பட்ட முறையில் தன்னுடை நிதி மற்றும் முதலீட்டு சேவைகளை வழங்க முடியும்.

உதாரணமாக, மியூச்சுவல் ஃபண்டுகள், கடன்கள் மற்றும் இன்சூரன்ஸ் போன்றவற்றை யாருக்கு அவசியமோ அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பரிந்துரைக்க முடியும். இது ரிலையன்ஸன் பைனான்ஸ் நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சிக்கு அடித்தளமிடும் முயற்சியாகும்.

உலகின் மிகப்பெரிய மொபைல் நெட்வொர்க் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தற்போது 49.8 கோடி சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. இந்நிலையில், ஜியோ ஃபைனான்ஸ் ஆப் மூலம் 24 ரூபாய் செலுத்தி வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யும் போது, பயனர்கள் தங்கள் வருமானம், செலவு முறைகள், முதலீடு பழக்கங்கள், சொத்து விவரங்கள் மற்றும் வரி அமைப்பு விருப்பங்கள் போன்ற மதிப்புமிக்க தகவல்களை வழங்க வேண்டியிருக்கும்.

இந்த தரவு, ஜியோவின் பல்வேறு தயாரிப்புகளான ஜியோ பிளாக்ராக் AMC மூலம் மியூச்சுவல் ஃபண்டுகள், ஜியோ பேமென்ட்ஸ் வங்கி வழியாக கடன்கள் மற்றும் டெபாசிட், அலியன்ஸ் கூட்டணி மூலம் இன்சூரன்ஸ் ஆகியவற்றை வலுப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

ஜியோவின் AI-ஆதரவு வரி திட்டமிடல் கருவி, பயனர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட முதலீடு தயாரிப்புகள் அல்லது இன்சூரன்ஸ் திட்டங்களை பரிந்துரைக்கும் திறன் கொண்டது. இந்த 24 ரூபாய் சேவை நீண்டகால வருவாய் ஓட்டத்தை முகேஷ் அம்பானி தலைமையிலான நிர்வாகத்திற்கு கிடைக்கும்.

Jio Finance: ரூ.24 சேவைக்கு பின்னால் இவ்வளவு பெரிய விஷயம் இருக்கா? முகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்

ஜியோ பைனான்ஸ் வெறும் 24 ரூபாய்க்கு வருமான வரி தாக்கல் சேவையை அளிக்கும் காரணத்தால், இதேபோன்ற சேவையை அளிக்கும் மற்ற நிறுவனங்களுக்கு இது பெரும் போட்டியாக இருக்கும். ஏற்கனவே பல போட்டி நிறுவனங்கள் செலவுகளை குறைத்தும், ஊழியர்களை பணிநீக்கம் செய்தும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்தகையை சேவையை அரசு தளங்கள் அல்லாமல் மற்ற கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு அளிப்பதில் இரு்ககும் மிகப்பெரிய அச்சம், தரவு தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தான். இந்தியாவின் புதிய தரவு பாதுகாப்பு சட்டம் 2023 இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை. பல பயனர்கள், ஆப்-ல் ஒப்புதல் கொடுப்பதன் மூலம் தங்கள் தகவல்களை இழக்கிறார்கள் என்பதை உணர்வதில்லை.

ஜியோ போன்ற பெரிய நிறுவனங்கள் தரவுகளை பாதுகாப்பாக கையாள்வதாக உறுதியளித்தாலும், தவறான பயன்பாட்டுக்கான அபாயம் இருக்கிறது. இது, பயனர்களை எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்துகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+