ஒட்டுமொத்த இந்தியாவே டி20 உலக கோப்பை இறுதி போட்டிகள் குறித்து தான் பரபரப்பாக பேசுகிறது. எப்படியாவது இந்தியா இந்த கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என கோடிக்கணக்கான இந்தியர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
ஆயிரக்கணக்கானவர்கள் போட்டி நடைபெறக்கூடிய நரேந்திர மோடி மைதானத்தில் குவிந்திருக்கின்றனர். இது தவிர நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொது இடங்களில் திரைகள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் இந்தியா நியூசிலாந்து இடையிலான போட்டிகளை கண்டு ரசிக்கின்றனர். கிரிக்கெட் போட்டிகள் என்பது இந்தியர்களின் உணர்வுடன் கலந்த ஒரு விஷயம் என்பதால் தான் இந்தியா எந்த ஒரு கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டாலும் கோடிக்கணக்கான மக்களின் பார்வையை பெறுகிறது.

அந்த வகையில் கிரிக்கெட் போட்டிகள் பெரிய லாபம் தரக்கூடிய பல லட்சம் கோடி பணம் புழங்கக்கூடிய ஒரு விளையாட்டு. இதன் காரணமாக தான் பெரும்பாலும் இந்தியா பங்கேற்க கூடிய கிரிக்கெட் போட்டிகள் அனைத்துமே ஞாயிற்றுக்கிழமைகளில் தான் நடத்தப்படும். அதிகமான மக்கள் அன்றைய தினத்தில் போட்டிகளை கண்டு ரசிப்பார்கள் இது போட்டிகளை நடத்தக்கூடிய அமைப்புகளுக்கும் சரி அவற்றை ஒளிபரப்ப கூடிய நிறுவனங்களுக்கும் சரி பெரிய அளவிலான லாபத்தை பெற்று தரும்.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை போட்டிகள் உலகளவில் ஏற்கனவே ஸ்ட்ரீமிங் தளங்களில் பெரிய அளவிலான பார்வைகளை பெற்று விட்டன. மார்ச் ஐந்தாம் தேதி அன்று இந்தியா இங்கிலாந்து இடையிலான அரை இறுதி போட்டி உலக அளவில் இதுவரையும் அதிகமானவர்கள் டிஜிட்டல் தளத்தில் பார்த்த விளையாட்டுப்போட்டி என்ற சாதனையை படைத்திருக்கிறதாம். இந்தியாவில் அந்த ஒரு நாளில் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் மட்டும் 65.2 மில்லியன் பேர் அந்த போட்டியை பார்த்திருக்கின்றனர். இது வேர்ல்ட் ரெக்கார்ட் என சொல்லப்படுகிறது.

உலகிலேயே வேறு எந்த டிஜிட்டல் தளத்திலும் ஒரே சமயத்தில் இவ்வளவு மக்கள் ஒரு நிகழ்ச்சியை கண்டது இதுவே முதன்முறையாம். இந்தியா பங்கேற்ற அரையிறுதி போட்டியை மொத்தம் 619 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர். அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிகமான ஆன்லைன் பார்வைகளை பெற்ற போட்டி என்ற பெருமையும் இதற்கு கிடைத்திருக்கிறது. தொலைக்காட்சி மற்றும் பிற டிஜிட்டல் தளங்களில் அதிகமானவர்கள் பார்த்த ஒரு விளையாட்டு போட்டி என்ற பெருமையும் இந்த அரையிறுதி போட்டிக்கு தான் கிடைத்திருக்கிறது.
320 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள், வாட்ச் டைம் என்பது 23 பில்லியன் நிமிடங்களாக இருந்திருக்கிறது. அதாவது மூன்றில் ஒரு இந்திய அரையிறுதி போட்டியை பார்த்திருக்கிறார்கள் என்கிறது ஒரு தகவல். நிச்சயமாக இந்த ரெக்கார்ட் இன்றைய தினம் இறுதிப் போட்டியில் பிரேக் செய்யப்பட்டு விடும். அதைவிட அதிகமானவர்கள் இறுதிப்போட்டியை கண்டு ரசிப்பார்கள் என்பதை மறுக்க முடியாது.
இது ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திற்கு பெரிய அளவிலான வருமானத்தையும் ஈட்டி தந்து இருக்கிறது என்பதுதான் உண்மை. முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனம் தான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அதிகாரப்பூர்வ ஊடக உரிமையா உரிமையாளராக இருக்கிறது. இந்தியா நியூசிலாந்து இடையிலான இறுதிப் போட்டியை கோடிக்கணக்கான மக்கள் பார்வையிடுவார்கள் என்பதால் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் விளம்பரங்களை ஒளிபரப்பு செய்வதற்கு பல்வேறு நிறுவனங்களும் கடுமையாக போட்டியிடுகின்றன.
அந்த வகையில் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் ஒவ்வொரு 10 செகண்ட் அதாவது ஒவ்வொரு 10 நொடி விளம்பரத்திற்கும் 50 லட்சம் ரூபாயில் கட்டணமாக டிமாண்ட் செய்வதாக எக்கனாமிக்ஸ் செய்தி குறிப்பிடுகிறது. எவ்வளவு தொகையாக இருந்தாலும் பரவாயில்லை என நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு 50 லட்சம் என அதற்கு மேல் கூட பணத்தை கொடுத்து விளம்பரங்களை வெளியிடுவதற்கு தயாராக இருக்கின்றனவாம்.
இறுதிப் போட்டி என்பதால் ஏராளமான மக்கள் பார்வையிடுவார்கள், அதே வேலையில் இந்த போட்டிக்கான அட்வர்டைசிங் இன்வென்ட்ரி நேரம் என்பது லிமிடெட் ஆக தான் இருக்கிறது என்பதால் அதற்குள் ஒரு விளம்பர சிலாட்டினையாவது பெற்று விட வேண்டும் என நிறுவனங்கள் மத்தியில் போட்டியாக இருக்கிறது. அந்த வகையில் நாம் பார்க்கக்கூடிய ஒவ்வொரு நொடியும் முகேஷ் அம்பானிக்கு 5 லட்சம் ரூபாயை சம்பாதித்து தருகிறது. ஒவ்வொரு 10 நொடி விளம்பரமும் ஜியோவுக்கு 50 லட்சம் ரூபாய் வருமானத்தை பெற்று தருகிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications