மும்பை: நடப்பாண்டில் மிகப்பெரிய அறிவிப்பாக வெளிவந்தது ஜியோ மற்றும் ஹாட் ஸ்டார் இணைப்பு. அதாவது இந்தியாவில் ரிலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஜியோவும் மற்றும் வால் டிஸ்னியின் ஹாட் ஸ்டார் நிறுவனமும் இணைந்து கூட்டு நிறுவனமாக செயல்படும் என சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் இந்தியாவில் இயங்கும் மீடியாவின் பெரும்பாலான பகுதி முகேஷ் அம்பானியின் வசம் சென்றது. இந்நிலையில் இந்த கூட்டு நிறுவனத்திற்கான அதிகாரப்பூர்வ பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்ட நிலையில் ஜியோஸ்டார் .காம் (JioStar.com) தளம் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஜியோ ஸ்டார் டாட் காம் என்ற புதிய டிஜிட்டல் தளம் லைவில் வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இது ஒரு ஸ்ட்ரீமிங் பிளாட்பார்மாக வெளியிடப்படவில்லை.

இந்த தளத்தில் தற்போதைக்கு எஸ்டி (Standard Definition (SD))மற்றும் ஹெச்டி (High Definition (HD)) ஸ்ட்ரீமிங்களுக்கான சந்தா திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள. ஹிந்தி பேசக்கூடிய மக்களுக்கு என ஜியோ ஸ்டார் தளத்தில் ஸ்டார் வேல்யூ பேக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாதத்திற்கு 59 ரூபாய் செலுத்தினால் போதும் 16 எஸ்டி சேனல்களை பார்க்க முடியும். இதில் ஸ்டார் ப்ரீமியம் என்ற ஒரு பேக்கும் இருக்கிறது அதில் மாதத்திற்கு 105 ரூபாய் செலுத்தினால் 23 சேனல்களை பார்க்க முடியுமாம்.
ஹெச்டி பேக் வேண்டும் என விரும்புபவர்கள் ஸ்டார் வேல்யூ பேக் லைட் ஹெச்டி பெற மாதத்திற்கு 88 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டும் .இதில் பிரிமியம் பேக்கினை பெறுவதற்கு மாதத்திற்கு 125 ரூபாயை ரீசார்ஜ் செய்ய வேண்டும். அதில் 22 சேனல்களும் 14 சேனல்கள் ஹெச்டி வடிவத்திலும் கிடைக்கும்.
தமிழ் மொழி பேசும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்டார் வேல்யூ பேக் தமிழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாதத்திற்கு 59 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 10 எஸ்டி சேனல்களை பார்க்க முடியும். ஸ்டார் வேல்யூ பேக் ஹெச்டி தமிழில் மாதத்திற்கு 77 ரூபாய் ரீசார்ஜ் செய்து 9 சேனல்களை பார்க்கலாம். அதில் 5 சேனல்கள் ஹெச்டி வடிவத்தில் பார்க்க முடியும்.மேலும் ஸ்டார் பிரீமியம் தமிழ் பேக்கில் 15 சேனல்களையும் அதில் 11 சேனல்களை ஹெச்டி வடிவத்திலும் பார்க்கலாம் .இதற்கு மாதத்திற்கு 105 ரூபாய் செலுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு என்றும் ஜியோ ஸ்டார் தளத்தில் தனியாக சேனல் பேக்குகள் இருக்கின்றன. டிஸ்னி கிட்ஸ் பேக் என்று இந்த திட்டத்தில் மாதத்திற்கு 15 ரூபாய் செலுத்தினால் மூன்று எஸ்டி சேனல்களை பார்க்க முடியும் இதுவே ஹெச்டி முறையில் பார்க்க வேண்டும் என்றால் மாதத்திற்கு 18 ரூபாய் செலுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications