இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி சேம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற கலைப்பில் இருந்து மீண்டு வரும் வேளையில், உலகளாவிய கிரிக்கெட் ஸ்டார்கள் அனைவரும் இந்தியாவுக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர். ஆம், இந்த ஆண்டு அனைவரும் எதிர்பார்க்கப்படும் டாடா-வின் இந்தியன் பிரீமியர் லீக், அதாவது ஐபிஎல் போட்டி அடுத்த சில நாட்களில் துவங்க உள்ளது.
ஐபிஎல் வெறும் விளையாட்டுப் போட்டி என்பதைத் தாண்டி உலகளாவிய பிராண்டுகளுக்கான ஒரு தளம் என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு ஆண்டு பல்லாயிரம் கோடி ரூபாய் புரளும் ஒரு வர்த்தக வாய்ப்பு தான் இந்த ஐபிஎல். விளையாட்டு மற்றும் பிராண்டுகளை சங்கமிக்கும் ஒரு இடமாக ஐபிஎல் விளங்குகிறது. எப்படி அமெரிக்காவுக்கு ஒரு சூப்பர் பவுல் இருக்கிறதோ இதேபோல் இந்தியாவுக்கு ஐபிஎல்.

இந்த ஆண்டு, கொஞ்சம் ஸ்பெஷல் எப்போதும் ஐபிஎல் ஓடிடி மற்றும் டிவி ஒளிபரப்பு உரிமம் இரண்டு நிறுவனங்களிடம் பிரிந்து இருக்கும், ஆனால் முதல் முறையாக இந்த ஆண்டு ஓடிடி மற்றும் டிவி ஒளிபரப்பு உரிமத்தை ஜியோஸ்டார் கூட்டணி கொண்டு இந்த ஐபிஎல் நடக்க உள்ளது. இதனால் ஐபிஎல் போட்டியில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றால் ஓன் ஸ்டாப் சொல்யூஷனாக ஜியோஸ்டார் உள்ளது. இதனாலேயே விளம்பர கட்டணம் தடாலடியாக உயரும் என்ற கருத்து உள்ளது.
ஐபிஎல் போட்டியின் கடந்த ஒளிபரப்பு உரிமம் ஏலத்தில் ஓடிடி உரிமத்தை ஜியோவும், டிவி உரிமத்தை ஸ்டார் நெட்வொர்க்-ம் பெற்றது. ஆனால் தற்போது இவ்விரு நிறுவனங்களும் இணைந்துள்ள காரணத்தால் ஓடிடி மற்றும் டிவி ஒளிபரப்பு உரிமம் ஒரே நிறுவனத்தின் கையில் வந்துள்ளது.
இந்த நிலையில் 2025 ஐபிஎல் போட்டிக்கு ஜியோஸ்டார் சுமார் 20 முன்னணி ஸ்பான்சர்களை பெற்றுள்ளது. பொதுவாக ஐபிஎல் சீசனில் ஒளிபரப்பு உரிமம் பெற்ற நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் கிரிக்கெட் விரர்களும் அதிகப்படியான விளம்பர வருவாய் பெறுவார்கள். இந்தியாவில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என திட்டமிடும் நிறுவனங்கள், இந்தியாவில் வர்த்தகம் துவங்க வேண்டும் என திட்டமிடும் நிறுவனங்கள் என அனைத்து தரப்பினருக்கும் இந்த ஐபிஎல் சிறப்பான வாய்ப்பை அளிக்கும். இதேவேளையில் கிரிக்கெட் வீரர்களும் பெரிய அளவில் கல்லாகட்டுவார்கள்.
இந்த நிலையில் டாடா ஐபிஎல் 2025க்காக ஜியோஸ்டார் பல்வேறு புகழ்பெற்ற பிராண்டுகளுடன் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களை செய்துள்ளது. இந்த பட்டியலில் முக்கியமாக மை11சர்க்கிள், கேம்பா எனர்ஜி, பிர்லா ஓபஸ், போக்கர்பாஸி, எஸ்பிஐ, போன்பே, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சஹி ஹை, தம்ஸ் அப், கூகுள் சர்ச், ஆலன் சோலி, ஜாகுவார் பாத் + லைட், ஜிபே, கென்ட் குஹ்ல் ஃபேன்ஸ், ட்ரீம்11, ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான கேம்பா, ஜாய் காஸ்மெட்டிக்ஸ், டிவிஎஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஜூப்பி மற்றும் அமுல் ஆகியவை இதில் அடங்கும்.
ஐபிஎல் 2025 விளம்பர வருவாய் மட்டும் ரூ. 6,000 முதல் 7,000 கோடி வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருவாய் டிவி மற்றும் டிஜிட்டல் தள விளம்பரங்கள், டீம் ஸ்பான்சர்ஷிப் மற்றும் ஆன் கிரவுண்ட் விளம்பர ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முதல்கட்ட கணிப்புகள் மட்டுமே, போட்டியின் இறுதியில் இத்தொகை அதிகரிக்கலாம், அல்லது குறையலாம்.
ஐசிசி சேம்பியன்ஸ் டிராபி கோப்பை இறுதி போட்டியில் சுமார் 82 கோடி மக்கள் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தின் வாயிலாக மட்டுமே பார்த்தனர். இந்த எண்ணிக்கையை டாடா ஐபிஎல் 2025 முறியடிக்குமா என்பது காத்திருந்து தான் பார்க்க வேண்டும். மார்ச் 22 முதல் மே 25 வரை நடைபெற உள்ள இந்த போட்டி, நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மன்னிக்கவும் கிரிக்கெட் வெறியர்களை ஸ்கிரீன் முன்பு உட்கார செய்யும் என்பதால் கட்டாயம் 82 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications