மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் அடுத்த 5 வருடத்தில் இந்தியாவில் புதிதாக 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளையும், கூடுதலாக 30 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தியும் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்
இந்நிலையில் மார்ச் 1, 2020 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 8.72 லட்சம் மத்திய அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதேபோல் இந்தியா முழுவதும் மாநில அரசு பணியிடங்களும் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
8.72 லட்சம் பணியிடங்கள் காலி
இன்று ராஜ்ய சபாவில் சமர்ப்பித்துள்ள அறிக்கையின் படி மார்ச் 1, 2020 நிலவரத்தின் படி மத்திய அரசின் பல்வேறு துறைகளில் சுமார் 8.72 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது. எந்தத் துறையில் எவ்வளவு பணியிடங்கள் காலியாக உள்ளது எனத் தெரிவிக்கவில்லை.
ஜிதேந்திர சிங்
மார்ச் 1, 2019ல் 9,10,153 மத்திய அரசு பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில், மார்ச் 2020ல் 8,72,243 ஆகக் குறைந்துள்ளது. இது மார்ச் 2018ல் 6,83,823 ஆக இருந்தது என எழுத்து வாயிலாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
3 வேலைவாய்ப்பு அமைப்பு
மத்திய அரசு தொடர்ந்து பணியாளர் தேர்வு ஆணையம் (SSC), யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) மற்றும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் (RRBs) ஆகிய அமைப்புகளின் வாயிலாகப் பணியிடங்களை நிரப்பி வருகிறது.
2,65,468 பேருக்கு வேலை
மத்திய அரசு இந்த 3 அமைப்புகள் நடத்திய பல்வேறு தேர்வுகளின் வாயிலாக 2018-19 முதல் 2020-21 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 2,65,468 ஊழியர்களைப் பணியில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம்
சமீபத்தில் பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ரயில்வே வேலைவாய்ப்புகளுக்குத் தேர்வு செய்யும் பணியில் குளறுபடி, முறைகேடுகள் செய்யப்பட்டு உள்ளதைத் தொடர்ந்து இரு மாநிலத்திலும் மக்கள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
1 கோடி விண்ணப்பம்
வெறும் 40000 ரயில்வே வேலைவாய்ப்புகளுக்கு 1 கோடிக்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் போராட்டம் இந்தியாவில் முதல் முறையாக நடக்கும் மிகப்பெரிய வேலைவாய்ப்பின்மை போராட்டமாகப் பார்க்கப்பட்டது.
மிகப்பெரிய போராட்டம்
சிறிதளவில் துவங்கிய போராட்டம் ஒருவாரத்தில் மிகப்பெரிய போராட்டமாக இரு மாநிலத்திலும் வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் ரயில் பாதையில் போராட்டம், ரயில் பெட்டியில் கல் எறிதல், ரயில் பெட்டிகளை எரிக்கும் வரையில் தீவிரமாக மாறியுள்ளது. பல இடங்களில் மோடியின் உருவபொம்மையும் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!



Click it and Unblock the Notifications