ஜேகே சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் கடந்த அக்டோபர் - டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில், அதன் நிகரலாபம் 74.82% அதிகரித்து, 217.28 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் இந்த நிறுவனம் இதே காலாண்டில் வெறும் 124.29 கோடி ரூபாய் லாபத்தினை கண்டிருந்ததாக, பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதே இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 24.52% அதிகரித்து 1832.71 கோரி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 1471.78 கோடி ரூபாயாக இருந்ததாக இந்த நிறுவனம் வெலியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

வருவாய் அதிகரித்துள்ள அதே சமயத்தில் இதன் செலவும் 24.52% அதிகரித்து 1832.71 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதே முந்தைய ஆண்டில் 1318.80 கோடி ரூபாயாக இருந்ததாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற இந்த நிறுவனத்தின் குழு கூட்டத்தில், 4 மில்லியன் டன் ஒருங்கிணைந்த கீரின் ஃபீல்ட் சாம்பல் சிமெண்ட் ஆலையை, மத்திய பிரதேசத்தின் பன்னாவில், அதற்கு சொந்தமான துணை நிறுவனமான ஜெய்காம் லிமிடெட் நிறுவனத்தில் நிறுவ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஜேகே சிமெண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனுடன் உத்திரபிரதேசத்தில் ஒரு அரைக்கும் யூனிட் அலகுடன், இந்த திட்டத்திற்கு 2,970 கோடி செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த ஜேகே சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவில் 31.05 ரூபாய் குறைந்து, 2245 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இந்த அறிவிப்புகள் சனிக்கிழமையன்று வந்ததால், இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது நாளை நல்ல மாற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கும் இது நல்ல லாபத்தினை கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications