ரூ.250 கோடிக்கு பிரம்மாண்ட பங்களா வாங்கிய பேப்பர் கம்பெனி முதலாளி.. எங்க தெரியுமா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிரிப்டோகரன்சி, என்எஃப்டி என எத்தனை டிஜிட்டல் கரன்சிகள் வந்தாலும் இந்தியர்களுக்கு மண் மீதும், பொன் மீதும் இருக்கும் ஆசை எப்போதும் குறையாது.

 

சீனாவில் லாக்டவுன்.. 1.3 கோடி மக்கள் வீட்டில் முடங்கினர்.. தொழிற்சாலைகளுக்கு பூட்டு..!சீனாவில் லாக்டவுன்.. 1.3 கோடி மக்கள் வீட்டில் முடங்கினர்.. தொழிற்சாலைகளுக்கு பூட்டு..!

அந்த வகையில் நாட்டின் முன்னணி பேப்பர் நிறுவனமான JK பேப்பர் நிறுவனத்தின் தலைவர் 250 கோடி ரூபாய்க்கு பிரம்மாண்ட வீட்டை வாங்கி அசத்தியுள்ளார். சரி வீடு எங்க இருக்கு தெரியுமா..?

அமர் சிங் மேத்தா - ஜேகே பேப்பர்

அமர் சிங் மேத்தா - ஜேகே பேப்பர்

ஜேகே பேப்பர் நிறுவனத்தின் தலைவரான அமர் சிங் மேத்தா டெல்லியில் பிருத்விராஜ் சாலையில் அமைந்திருக்கும் 2800 ஹெக்டர் லுடியன்ஸ் பங்களா மண்டலத்தில் (LBZ) 3,731-சதுர யார்ட் அளவு கொண்டு பங்களாவை சுமார் 250 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பாய் மஞ்சித் சிங் மற்றும் விக்ரம்ஜித் சிங்

பாய் மஞ்சித் சிங் மற்றும் விக்ரம்ஜித் சிங்

இந்தக் கட்டிடத்தின் உரிமையாளர்களான பாய் மஞ்சித் சிங் மற்றும் விக்ரம்ஜித் சிங் ஆகியோர் நீண்ட காலமாக வீட்டை விற்பனை செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டு வந்த நிலையில் தற்போது ஜேகே பேப்பர் தலைவர் அமர் சிங் மேத்தா வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

லுடியன்ஸ் பங்களா மண்டலம்
 

லுடியன்ஸ் பங்களா மண்டலம்

லுடியன்ஸ் பங்களா மண்டலம் (LBZ) என்பது பிரிட்டிஷ் காலத்தில் இருந்து அரசு அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் அவர்களின் நிர்வாக அலுவலகங்கள் இருக்கும் முக்கியமான பகுதியாக டெல்லியில் விளங்குகிறது, இதனால் இப்பகுதியில் விற்பனை செய்யப்படும் சொத்துக்கள் முக்கியச் செய்தியாக மாறுவது வழக்கம், தற்போது இப்பகுதியில் ஒரு வீட்டை ஜேகே பேப்பர் போன்ற முன்னணி நிறுவனத்தின் தலைவர் வாங்குவது கூடுதல் கவனிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ranbaxy

Ranbaxy

இதில் பாய் மஞ்சித் சிங் மிகவும் முக்கியமானவர் இந்தியா பாகிஸ்தான் பிரிவின் போது ராவல்பிண்டியிலிருந்து டெல்லிக்கு வந்து Ranbaxy என்னும் குட்டி நிறுவனத்தில் பங்குகளை வாங்கி இந்தியாவில் மிகப்பெரிய பார்மா டிஸ்ட்ரிபியூஷன் வர்த்தகத்தை உருவாக்கினார், பாய் மஞ்சித் சிங்-ன் பேரன் தான் விக்ரம்ஜித் சிங் இவ்விருவருக்கும் சொந்தமான வீட்டை தான் தற்போது ஜேகே பேப்பர் தலைவர் அமர் சிங் மேத்தா வாங்கியுள்ளார்.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

இந்திய நிறுவனங்களின் தலைவர்களிலேயே மிகவும் ஆடம்பரமான மற்றும் விலை உயர்ந்த வீட்டை வைத்துள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி தான். மும்பையில் அல்டாமவுண்ட் சாலை, கும்பல்லா ஹில் பகுதியில் இருக்கும் ஆன்டிலியா அமைந்துள்ளது.

மும்பை - ஆன்டிலியா

மும்பை - ஆன்டிலியா

ஆன்டிலியா சுமார் 27 மாடி, 173 மீட்டர் உயரம் 4,00,000 சதுரடியில் அமைந்துள்ளது. இந்த வீட்டில் 3 ஹெலிபேட், ஏர் டிராபிக் கன்ட்ரோல் சென்டர், 168 கார் பார்கிங்-கான இடம், 9 லிப்ட், 50 சீட் கொண்ட தியேட்டர், ஜிம், கோவில், ஸ்பா, பால்ரூம் எனப் பலவற்றும் உள்ளது. முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா வீட்டின் மதிப்பு மட்டும் 2.6 பில்லியன் டாலர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

JK Paper Amar Singh Mehta buys ₹250-cr bungalow that owned by Ranbaxy Bhai Manjit Singh in Delhi LBZ

JK Paper Amar Singh Mehta buys ₹250-cr bungalow that owned by Ranbaxy Bhai Manjit Singh in Delhi LBZ ரூ.250 கோடிக்கு பிரம்மாண்ட பங்களா வாங்கிய பேப்பர் கம்பெனி முதலாளி..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X