ஹூண்டாயுடன் கைகோர்க்கும் ஜேகே டயர்ஸ்.. இது ரொம்ப நல்ல விஷயம் தான்..!

நாட்டின் முன்னணி டயர் உற்பத்தியாளரான ஜேகே டயர் & இண்டஸ்ட்ரீஸ், ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜேகே டயர்ஸ் தனது யுஎக்ஸ் ராயல் 215/60 ஆர்17 ரேடியல் டயரை ஹூண்டாயின் கிரெட்டாவின் டாப் எண்ட் மாடல்களுக்கு வழங்கவுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த டயர் பல அம்சங்களை கொண்டுள்ளதாகவும், இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மிருதுவான சவாரி, குறைந்த சத்தத்துடன் பயணங்களை மேற்கொள்ள முடியும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சந்தையை வலுப்படுத்தும்

சந்தையை வலுப்படுத்தும்

இந்த கூட்டணி குறித்து இந்த நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனர் விகே மிஸ்ரா, இந்தியாவின் சிறந்த விற்பனையான ஹூண்டாய் எஸ்யூவியின் கிரெட்டாவின் கூட்டணி எங்களது திறனை மேம்படுத்தும். மேலும் நாங்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு, அதிநவீன அம்சங்களுடன் மிகச்சிறந்த தரமான டயர்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

சந்தை பங்கினை அதிகரிக்கும்

சந்தை பங்கினை அதிகரிக்கும்

அதோடு இந்த கூட்டணி எங்கள் சந்தை இருப்பை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் ஹூண்டாய் மோட்டார்ஸூடன் தொடர்ச்சியான மற்றும் வலுவான கூட்டாட்சியை எதிர்பார்க்கிறோம். இது குறித்து ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா கூறுகையில், அனைத்து புதிய கிரெட்டாவும் மார்ச் 2020ல் அறிமுகப்படுத்தப்பட்டத்தில் இருந்து, வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்காத அளவு பெர்பார்மன்ஸ் இருந்து வருகின்றது.

பல அம்சங்கள்

பல அம்சங்கள்

இது வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு வடிவமைப்பு, கட்டமைப்பு என பல சிறப்பம்சங்கள் உள்ளன. இது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பினையும் மீறிய ஒரு காராவும் இருந்து வருகிறது. இந்நிலையில் ஜேகே டயர்ஸின் கூட்டணி மூலம், இன்னும் நல்லதொரு உணர்வை, வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முடியும் என்றும் ஹூண்டாய் தரப்பில் கூறியுள்ளது.

ஜேகே டயர்ஸ் பங்கு விலை

ஜேகே டயர்ஸ் பங்கு விலை

ஜேகே டயர்ஸின் பங்கு விலையானது இன்று 1.51% ஏற்றம் கண்டு, 77.30 ரூபாயாக காணப்படுகிறது. உண்மையில் வாகன விற்பனையானது சமீப காலத்தில் முடங்கியிருந்த நிலையில், டயர் நிறுவனங்களும் பின்னடைவை சந்தித்தன. இதன் காரணமாக ஜேகே டயர்ஸிம் அந்த சமயத்தில் சரிவினை கண்டது. ஆனால் தற்போது வாகன விற்பனை அதிகரித்து வரும் அதே நேரத்தில், இப்படி ஒரு ஒப்பந்தம் இன்னும் இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+