சென்னை: இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, டெல்லி என்சிஆர், புனே ஆகிய நகரங்கள் 2024 ஆம் ஆண்டின் Q 1 காலாண்டில் அதிக அளவில் அலுவலக இடங்களை குத்தகைக்கு விட்டுள்ளது என JLL இந்தியா ரிப்போர்ட் கூறுகிறது.
அந்த அறிக்கையின்படி நான்கு இந்திய நகரங்களான சென்னை, டெல்லி என்சிஆர், மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் குறிப்பாக பிஎஃப்எஸ்ஐ அதாவது வங்கி நிதி சேவைகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் பிளக்ஸ் மற்றும் உற்பத்தி பொறியியல் துறைகளில் தேவை அதிகரிப்பின் காரணமாக அதிக இடங்களை வாடகைக்கு மற்றும் ஒத்திகைக்கு எடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் பார்க்கும்போது இந்த நான்கு நகரங்களில் கிட்டத்தட்ட 10.62 மில்லியன் சதுர கிலோமீட்டர் அளவுக்கு இடங்களை அலுவலகங்களுக்காக குத்தகைக்கு எடுத்துள்ளனர்.விரைவில் இந்த நான்கு நகரங்கள் ஆபீஸ் அப்சார்ப்ஷன் எனப்படும் அலுவலகங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு அதிக அளவில் எடுக்கும் நகரங்களில் முதலிடம் பிடிக்கும் வாய்ப்புள்ளது.

மேலும் இந்தியாவில் மட்டும் குறிப்பாக 2024 ஆம் ஆண்டின் Q 1 காலாண்டில் 15.16 மில்லியன் சதுர அடி அளவிற்கு ஒட்டுமொத்த அலுவலக குத்தகைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது போன ஆண்டின் Q 1 காலாண்டோடு ஒப்பிடுகையில் 13.8 சதவிகித உயர்வாகும்.இந்த வளர்ச்சியானது எந்த ஆண்டிலும் இல்லாத அளவுக்கு Q 1 காலாண்டில் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது மிக உயர்ந்த மொத்த குத்தகையை பிரதிபலிக்கிறது
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உள்நாட்டில் வணிகம் செய்பவர்கள் தங்களுக்கு தேவையான இடங்களை குத்தகைக்கு எடுத்ததை தொடர்ந்து இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பிளக்ஸ் மற்றும் உற்பத்தி துறைகள் வலுவான வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. ஆனால் அதே நேரத்தில் தொழில்நுட்பத் துறை மந்தநிலையை சந்தித்து வருகிறது இத்தகைய சவால்கள் இருந்த போதிலும் Q 1 காலாண்டில் மொத்த குத்தகைகளில் 21 சதவீதத்தை கொண்டுள்ளது. உற்பத்தி மற்றும் பொறியியல் துறையின் பங்கு 20.2 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வளர்ச்சியாகும்.
டெல்லி என் சி ஆர் மற்றும் பெங்களூரு ஆகியவை அலுவலகங்களை குத்தகைக்கு எடுப்பதில் முன்னணியில் உள்ளன. இது Q 1 காலாண்டில் தோராயமாக 47 சதவீதத்தை கொண்டுள்ளது சென்னையில் மட்டும் 17.6 சதவீதமாக உள்ளது அதை தொடர்ந்து மும்பை மற்றும் பூனே அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
பேண்டமிக் காலகட்டத்திற்கு பிறகு அலுவலக குத்தகை அதிக அளவில் எடுக்கப்பட்டுள்ளது. இது அலுவலக தேவையின் வலுவான தேவையை வெளிப்படுத்துகிறது.புதிய குளோபல் கேபபிலிட்டி சென்டர்ஸ்களின் (GCCs) நுழைவு, தற்போதுள்ள GCCகளின் விரிவாக்கம் மற்றும் சாதகமான உற்பத்திக் கொள்கைகள் ஆகியவற்றின் மூலம், இந்தியாவின் அலுவலகச் சந்தை 2023 ஆம் ஆண்டில் காணப்பட்டதை விட உச்ச நிலைகளை விஞ்சும் வகையில் உள்ளது. இதில் 71 ஒப்பந்தங்களின் அடிப்படையில், சென்னையில் மட்டும் வணிக ரியல் எஸ்டேட் குத்தகைக்கு 6.02 மில்லியன் சதுர அடி விடப்பட்டுள்ளது இது ஜிசிசி செயல்பாட்டிற்கான மக்களின் நம்பகமான மற்றும் விருப்பமான இடமாக சென்னை இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.
More From GoodReturns

ரியல் எஸ்டேட்டில் பணத்தை கொட்டிய Dhurandhar நாயகன் மாதவன்.. சும்மாயில்ல பாஸ் ரூ.125 கோடி சொத்து மதிப்பு..!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications