உலகில் பல நாடுகள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாகப் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை உற்பத்தி மற்றும் பயன்பாட்டை விரைவில் நிறுத்த திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களான ஜாகுவார் லேண்டு ரோவர், வால்வோ, பென்ட்லி, போர்டு ஐரோப்பா ஆகியவை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் கார் தயாரிப்புகளை நிறுத்திவிட்டு முழுமையாக எலக்ட்ரிக் கார் நிறுவனமாக மாற வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் முதல் முறையாக ஒரு ஆட்டோமொபைல் நிறுவனம் எலக்ட்ரிக் கார் பயன்பாட்டுக்கான தளத்தை உருவாக்கியுள்ளது.
எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன்
இந்தியாவில் வர்த்தகம் செய்யும் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார் தயாரிப்பது மட்டும் அல்லாமல் விற்பனையும் செய்து வரும் நிலையில், எந்த நிறுவனமும் எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன்-ஐ அமைக்கத் திட்டமிடவில்லை.
இதனால் இந்தியாவில் எலக்ட்ரிக் கார் நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது.
எலக்ட்ரிக் கார் பயணங்கள்
இந்நிலையில் எலக்ட்ரிக் கார் பயணங்களை மேம்படுத்துவதற்காக ஒரு ஆட்டோமொபைல் நிறுவனம் சார்ஜிங் ஸ்டேஷனை அமைத்துள்ளது. டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜாகுவார் லேண்டுரோவர் நிறுவனம் இந்தியாவின் 19 பெரு நகரங்களில் இருக்கும் 22 கார் ஷோரூம்களில் சார்ஜிங் ஸ்டேஷனை அமைத்துள்ளது.
ஜாகுவார் I-Pace கார்
இந்தியாவில் ஜாகுவார் நிறுவனத்தின் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலான I-Pace கார் விற்பனைக்கு வரும் நிலையில், வாடிக்கையாளர்களுக்குக் கார்களை விற்பனை செய்வது மட்டும் அல்லாமல் பயணங்களை மேம்படுத்துவதற்கான பணிகளையும் செய்துள்ளது ஜாகுவார் லேண்டுரோவர் நிறுவனம்.
டாடா பவர் சார்ஜிங் ஸ்டேஷன்
டாடா நிறுவனத்தின் எல்க்டிரிக் வாகன விற்பனை சூடுபிடிக்கத் துவங்கி நாளில் இருந்து டாடா மோட்டார்ஸ் டாடா பவர் உடன் இணைந்து நாட்டில் 200க்கும் அதிகமாகச் சார்ஜிங் ஸ்டேஷனை அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சார்ஜிங் ஸ்டேஷன் மால், உணவகம், அலுவலகம், அப்பார்ட்மென்ட் மற்றும் சில நெடுஞ்சாலைகளிலும் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications