பெங்களூர்: 2024-ஆம் ஆண்டு இந்தியாவில் வேலைவாய்ப்பு சந்தை மீண்டும் வளர்ச்சி அடையத் தொடங்கியுள்ளது. சில காலமாக தொடர்ந்து பணி நீக்கங்களை அறிவித்து வந்த நிறுவனங்களால் பல பணியாளர்கள் வேலை இழந்தனர். ஆனால் தற்போது மீண்டும் வேலை வாய்ப்பு சந்தையில் புதிய எழுச்சி தென்படுகிறது. அப்னா டாட் கோ நிறுவனத்தின் "இந்தியா அட் வொர்க் 2024" என்ற அறிக்கை, இந்தியாவில் வேலை வாய்ப்பு விண்ணப்பங்கள் 27 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் 2 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பல்வேறு வேலைவாய்ப்புகளுக்காக பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள் சுமார் 60 லட்சம் வேலை வாய்ப்புகளுக்காக விண்ணப்பித்துள்ளனர். அதுவும் குறிப்பாக ஐடி துறை, ரீடைல், BFSI மற்றும் சேவைகள் சார்ந்த துறைகளில் இந்த விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன. அதோடு பஞ்சாப், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பீகார் போன்ற பகுதிகளில் 82 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

அப்னா டாட் காம் ஒரு வேலை வாய்ப்பு இணையதளமாகும். இதில் உள்ள 37 லட்சம் பிரஷர்களில் 45 சதவீதம் பெயர் டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களை சேர்ந்தவர்கள். அப்னா டாட் காம் வெளியிட்ட அறிக்கையின்படி பெண் விண்ணப்பதாரர்கள் 2.8 கோடி வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பத்துள்ளனர்.
2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024-ஆம் ஆண்டு பெண் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. டயர் 1 நகரங்களான டெல்லி என்சிஆர், பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் 1.52 கோடி விண்ணப்பங்களும் டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களான ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் போபால் போன்ற பகுதிகளில் 1.28 கோடி விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. தினசரி அடிப்படையில் வேலைவாய்ப்பு தளமான அப்னாவில் 5000 பெண் பட்டதாரிகள் இணைவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்னாவின் CEO மற்றும் நிறுவனரான நிர்மித் பரிக் கூறுகையில், 45 சதவீத சிறு மற்றும் குறு நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் 77 சதவீத வேலை தேடுபவர்களால் பயன்படுத்தப்படும் ரெஸ்யூம் ஆப்டிமைசேஷன் அம்சங்கள் போன்றவற்றால் ஆதிசேர்ப்பு செயல்முறையில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இன்றெல்லாம் வேலை தேடுபவர்கள் ஜாப் டிஸ்கிரிப்ஷனுக்கு தகுந்தாற் போல தங்களுடைய ரெஸ்யூமை வடிவமைக்கும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். அதோடு 2024-ஆம் ஆண்டில் 12 லட்சத்துக்கும் அதிகமான ஜாப் போஸ்டிங் பிளாட்பார்ம்கள் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது சுமார் 20% வளர்ச்சியாகும்.
2024-ஆம் ஆண்டில் அப்னா டாட் கோ இணையதளத்தில் மட்டும் வெளியான ஜாப் போஸ்ட்டுகள் 32 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் 500-க்கும் மேற்பட்ட நகரங்களில் 100-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் 3.5 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு தொடர்பான போஸ்ட்டுகள் பகிரப்பட்டுள்ளது. நாட்டின் பணியமர்த்தல் செயல்முறை மாற்றத்திற்குட்பட்டு வருவதை இந்த அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. வேலைவாய்ப்பு சந்தை மாற்றத்திற்கு உட்படுவது புதிதாக பட்டம் பெற்று வரும் பட்டதாரிகளுக்கும், ஏற்கனவே பணிபுரிந்து வேலை இழப்பை சந்தித்தவர்களுக்கும் மனநிம்மதியை வழங்கியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications