ஐபிஎம்மில் இருந்து பிரிந்த கைண்டரில் நிறுவனம் இந்தியாவில் பணி நீக்கம் செய்யும் ஒரு சமீபத்திய டெக் நிறுவனமாகும். இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 2 மாத சம்பளம் ஓய்வூதியமாக வழங்கப்படலாம் என தெரிகிறது.
இந்த பணி நீக்கம் குறித்தான அறிவிப்பானது மார்ச் 29 அன்று வெளியாகியுள்ளது.
தொடர்ந்து சர்வதேச அளவில் பணி நீக்கம் என்பது இருந்து வருகிறது. குறிப்பாக டெக் துறையில் பணி நீக்கம் இருந்து வருகின்றது. இந்த நிலையில் கைண்டரில் அறிவிப்பானது பெரும் அதிர்ச்சியளிக்காவிட்டாலும், அதன் ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி அளித்துள்ளது.
ஐபிஎம் ஸ்பின் ஆப் கைண்டரில்
கூகுள், மைக்ரோசாப்ட் தொடங்கி அமேசான் வரையில் பல்வேறு நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கையினை எடுத்துள்ளன. புதிய பணியமர்த்தலை நிறுத்தியுள்ளன. இந்த நடவடிக்கையானது இன்று வரையில் தொடர்ந்து கொண்டுள்ளது.
இந்த நிலையில் தான் ஐபிஎம்மில் இருந்து பிரிந்த கைண்டரில் பணி நீக்க நடவடிக்கையினை எடுத்துள்ளது.
மறுசீரமைப்பு நடவடிக்கை
தொடர்ந்து சர்வதேச அளவில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், நாங்கள் உலகளவில் பல்வேறு ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறோம். இது நிலவி வரும் போட்டித் தன்மைக்கு மத்தியில், சிறிய அளவிலான பணி நீக்கம் தான். இது எங்களின் செயல்பாட்டினை நெறிப்படுத்தவும், மேற்கொண்டு எங்களது நிறுவனத்தினை சீரமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இந்தியர்கள் பாதிப்பு
நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இத்தகைய நடவடிக்கையானது அவசியமான ஒன்றாகவும் உள்ளது. கைண்டரில் உலகம் முழுக்க சுமார் 90,000 பணியாளர்களை கொண்டுள்ளது.
அதன் உலகளாவிய பணியாளர்களில் 50% பேர் இந்தியாவினை சேர்ந்தவர்கள். ஆக இந்த பணி நீக்க நடவடிக்கையிலும் இந்தியர்களுக்கு பாதிப்பு அதிகம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மட்டும் சரிவு
எனினும் இந்த பணி நீக்க நடவடிக்கையில் இந்திய ஊழியர்கள் எவ்வளவு பேர், மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்பது குறித்தான முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.
ஐபிஎம் கைண்டரில் இந்த பணி நீக்க நடவடிக்கையில் அறிவிக்கப்பட்ட 2 மாத சம்பளம் சலுகையாக அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது. இது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் 6 மாதங்களாக வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் குறைவாக வழங்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
எந்த துறையில் தாக்கம்
இந்த பணி நீக்க நடவடிக்கையில் மார்கெட்டிங், நிர்வாகம், மனித வள நிர்வாகம் மற்றும் பல முக்கிய துறைகளில் உள்ளதாகவும் தெரிகிறது. மிக அதிகளவில் மார்கெட்டிங் மற்றும் மனித வள துறையில் பணி நீக்கம் என்பது இருப்பதாகவும், இத்துறைகளில் தெரிகிறது.
வருவாய்
கைண்டரில் டிசம்பர் 2022 காலாண்டுடன் முடிவடைந்த காலாண்டில் வருவாய் விகிதம் 4.3 பில்லியன் டாலராகவும், இது கடந்த ஆண்டினை காட்டிலும் 6% சரிவினைக் கண்டும், வரிக்கு முந்தைய நஷ்டம் 138 மில்லியன் டாலரும் மற்றும் நிகர நஷ்டம் 106 மில்லியன் டாலரும் உள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications