பணிநீக்கத்தை கண்டு அஞ்ச வேண்டாம்.. இதை பாலோ பண்ணுங்க, உடனே வேலை கிடைக்கும்..!!

சென்னை: ஒரு சில மாதங்களாக பணி நீக்கங்கள் அதிகமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. எந்த நேரத்தில் யாரை பணி நீக்கம் செய்வார்கள் என்று தெரியாமல் பலரும் குழப்பத்தில் உள்ளனர். ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பணி நீக்கங்களை பல முன்னணி IT நிறுவனங்களும் செய்துள்ள நிலையில், சிலர் வேலை கிடைக்காமல் வீட்டில் இருப்பீர்கள். அப்படிப்பட்ட நபர்களில் ஒருவராக நீங்கள் இருந்தால் உங்களுக்காகத்தான் இந்தப் பதிவு.

சில பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் கவலையாக உணர்வீர்கள். நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் உங்களை பணிநீக்கம் செய்தால், அதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாமலும் இருக்கலாம். முதலில் நமது வேலை வாழ்வின் ஒரு பகுதி தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களை வேலையை விட்டு நீக்கிய உடன் அதனைப் பற்றி கவலைப்படுவதை விட, இனிவரும் நாட்களை எப்படி சமாளிப்பது என்னும் அடுத்த கட்ட நிலைக்கு செல்வதைப் பற்றி யோசிக்க வேண்டும்.

 பணிநீக்கத்தை கண்டு அஞ்ச வேண்டாம்.. இதை பாலோ பண்ணுங்க, உடனே வேலை கிடைக்கும்..!!

பணி நீக்கம் செய்யப்பட்டவுடன் கவலையில் ஆழ்ந்து விடாமல் உடனே பிற வேலைகளை தேட தொடங்கலாம். அதுமட்டுமின்றி சில விஷயங்களை மேற்கொள்வதன் மூலம் எளிதில் உங்களால் வேலை தேட முடியும். அதற்கு கீழ்காணும் யுக்திகளை நீங்கள் பின்பற்றலாம்.

உங்கள் ரெஸ்யூமை (Resume) புதுப்பித்து, தொடர்ந்து வேலை தேடுங்கள் : தற்போது நீங்கள் வேறு ஒரு நிறுவனத்திற்கு வேலைக்காக செல்ல வேண்டும் என்பதால், உங்களுடைய திறன்கள் மற்றும் நீங்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிறுவனத்தில் எந்த பதவியில் இருந்தீர்கள் என்ற விவரங்களை குறிப்பிட்டு தெளிவாக ரெஸ்யூமை உருவாக்குங்கள். உங்களிடம் ஏற்கனவே ரெஸ்யூம் இருந்தால் அவற்றிலேயே நீங்கள் திருத்தங்களைச் செய்து கொள்ளலாம். மேலும் உங்கள் லிங்டின் பயோடேட்டாவை புதுப்பித்த நிலையில் வையுங்கள். இதன் மூலம் வேலை கொடுக்கும் பல நிறுவனங்களின் கண்ணில் உங்கள் விவரங்கள் போய் சேரும்.

பணி நீக்கம் செய்ததற்கான காரணம்: நீங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள். தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக நிறுவனத்தில் இருந்து ஆட்களை குறைக்கும் விதமாக பணி நீக்கம் செய்யப்பட்டால் அவற்றுக்கு நீங்கள் பொறுப்பல்ல. ஆனால் உங்களுடைய செயல் திறனில் பிரச்சனை இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டு இருந்தால், அவற்றை நீங்கள் சரி செய்து கொள்ள வேண்டும். எந்த விஷயம் உங்களுக்கு சரிவர தெரியவில்லை என்பதில் கவனம் செலுத்தி அதை பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

நிதானமாக சிந்தியுங்கள்: உங்களை பணி நீக்கம் செய்து விட்டார்கள் என்றால், நீங்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்து வெளி வருவதற்கு முதலில் நிதானமாக இருங்கள், அதன் பின் உங்களுடைய பலவீனத்தை கண்டறிந்து அதற்கு ஏற்றார் போல் முடிவெடுங்கள். மேலும் உங்கள் துறையில் உள்ள சீனியர் அல்லது குடும்பத்தினிரிடம் இதனைப் பற்றி ஆலோசனை பெறுங்கள். இவ்வாறு பொறுமையாக யோசிப்பது உங்கள் துறையில் நீங்கள் விரும்பிய படி முன்னேறுவதற்கு உதவும் என்று PR ஏஜென்சியின் நிறுவனர் அனுபவ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இவர் மீடியா துறையில் 10 வருடங்களுக்கு மேல் அனுபவம் பெற்றவர்.

உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்: உங்கள் திறமையை வளர்ப்பதற்கு தேவைப்படும் விபரங்களை இணையதளத்தை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். மேலும் உங்கள் துறையில் நீங்கள் சிறந்து விளங்க வேண்டும் என்று எண்ணினால், உங்கள் தொழில் சம்பந்தமான ஆன்லைன் சான்றிதழை வழங்கும் படிப்புகளை தேர்வு செய்யுங்கள். உங்கள் திறன்களை மேம்படுத்த ஆன்லைன் வகுப்புகளை பயன்படுத்துவது, வெபினார்களில் பங்கேற்பது எல்லாம் உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்று Gradding.com இன் HR நிர்வாகி மதுலிகா காத்ரி கூறியுள்ளார்.

சொந்தத் தொழில்: ஐடி நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் ஒரு முறையாவது பணியாற்றிக் கொண்டிருக்கும் சமயத்தில் சொந்தமாக தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று எண்ணியிருப்போம் அல்லவா.. அதற்கு ஏற்ப நீங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டால், ஏதாவது சொந்த தொழில் செய்வது குறித்து யோசிக்கலாம். அதற்கும் பட்ஜெட் இடிக்கிறது என்பவருக்கு அரசாங்கம் பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. பெண்களாக இருந்தால் முத்ரா திட்டம் போன்றவற்றை பயன்படுத்தி லோன் பெறலாம். இதை வைத்து உங்களுடைய தொழிலை தொடங்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+