குட்நியூஸ்!. வெளிநாடுகளில் இந்தியர்களின் தேவை அதிகரிப்பு!. 30 லட்சம் பேருக்கு வேலை உறுதி..!

2030 ஆம் ஆண்டுக்குள் உலகில் 7 முக்கிய நாடுகளில் இருந்து 3 மில்லியன் இந்திய இளைஞர்கள் வேலை வாய்ப்புகளைப் பெறுவார்கள் என்று மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் பகுப்பாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தொழிலாளர்களுக்கான சர்வதேச வேலைவாய்ப்பு நிலை வலுவாக உள்ளது. அதன்படி, சவுதி அரேபியா, ஓமன், கத்தார், ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் பின்லாந்து ஆகிய ஏழு நாடுகளில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சவூதி அரேபியா, இந்தியர்களுக்கான மிக அதிக வேலைவாய்ப்பு திறனைக் கொண்டுள்ளது. அதாவது, அந்நாட்டில் அடுத்த 5-10 ஆண்டுகளில் 20 லட்சம் இந்திய தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் என்று வெளியிடப்பட்ட மதிப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

குட்நியூஸ்!. வெளிநாடுகளில் இந்தியர்களின் தேவை அதிகரிப்பு!. 30 லட்சம் பேருக்கு வேலை உறுதி..!

மேலும், இந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை, மேற்கு ஆசிய நாடுகளால் ஆண்டுதோறும் சேர்க்கப்படும் சுமார் 200,000 இந்திய தொழிலாளர்களை விட அதிகமாகும். அதாவது, கட்டுமானம், சில்லறை விற்பனை, போக்குவரத்து மற்றும் சேமிப்பு, சுகாதாரம் ஆகிய துறைகளில் சவுதி அரேபியாவில் தொழிலாளர்களின் தேவை இருப்பதாக கூறப்படுகிறது.

இந்திய தொழிலாளர்களின் சர்வதேச பயணத்தை எளிமையாக்குவதற்காக, இந்திய தொழிலாளர் அமைச்சகம், இந்திய தொழில்துறை சங்கத்துடன் (CII)இணைந்து, தொழிலாளர்களின் திறன்கள் மற்றும் தகுதிகளின் பரஸ்பர அங்கீகாரத்திற்கான கட்டமைப்பை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

இதேபோல் ஓமான் அரசும், பொறியியல், தளவாடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் வேலைவாய்ப்பு வழங்குகிறது. இதனை தொடர்ந்து கத்தாரிலும் Hospitality(ஹாஸ்பிட்டாலிட்டி), விமான போக்குவரத்து மற்றும் விளையாட்டு துறைகளிலும் வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. ஜப்பானில், நர்சிங், உற்பத்தி (manufacturing,) மற்றும் போக்குவரத்துத் துறைகளிலும், ஜெர்மனியில் வாகன பழுது பார்க்கும் தொழில்நுட்பம்(Automotive mechanics ) சுகாதாரம், போக்குவரத்து மற்றும் HVAC (heating, ventilation, and air conditioning) துறைகளிலும் இந்திய தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குகிறது.

மேலும் ஜெர்மனியில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 2 லட்சம் முதல் 3 லட்சம் இந்திய தொழிலாளர்களை பணியில் அமர்த்த வாய்ப்புள்ளது. ஜெர்மனியின் பொருளாதார நிறுவனத்தின் (IW) படி, 2035ஆம் ஆண்டுவரை 7 மில்லியன் தொழிலாளர்கள், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, வெளிநாடுகளில் இந்திய தொழிலாளர்களுக்கு முழுநேர வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் புதிய வாய்ப்புகள் உருவாகி வந்தாலும், மத்திய கிழக்கு நாடுகளில்தான், அதிகளவில் தொழிலாளர்கள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

இதேபோல், ஆஸ்திரேலியாவில் செவிலியர்கள், software programmers மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள்( construction workers) துறையில் பணியாற்ற தொழிலாளர்கள் தேவைப்படுகின்றன. மேலும் பின்லாந்து சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம்(IT), கல்வி மற்றும் உற்பத்தித் துறைகளில் வாய்ப்புகளை வழங்கிவருகிறது.

இதுதொடர்பாக தேசிய தொழில் சேவை (NCS) போர்ட்டலில் உள்ள தரவுகளை தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ளது, NCS-ன் படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இந்திய தொழிலாளர்களுக்கான மிக சிறந்த இடமாக தொடர்ந்து உள்ளது என்றும் உள்கட்டமைப்பு, சுற்றுலா மற்றும் சேவைகளில் தொடர்ந்து முதலீடுகள் இருப்பதால் இந்திய தொழிலாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது என்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைத் தொடர்ந்து, இஸ்ரேல் 2023-24 ஆண்டில் இந்திய தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் முக்கிய நாடாக உருவெடுத்துள்ளதாகவும் அதிகாரி கூறினார்.

"நிறுவனங்கள், தொழில்நுட்ப மற்றும் தொழில் திறன்களைத் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், வேலை தேடுபவர்கள் தொழில் சார்ந்த பயிற்சி மூலம் தங்கள் தகுதிகளை மேம்படுத்துவதை முக்கியமானதாக பார்க்கிறது என்றும் இதற்காக இந்தியாவின் தொழிலாளர்கள் உலகளவில் அதிகமாக தேவைப்படுகின்றனர் என்றும் திறன் மேம்படுத்தலும் தொழில்முறை பயிற்சிகளிலும் தொடர்ந்து செய்யப்பட்ட முதலீடுகள், சர்வதேச வேலைவாய்ப்பு சந்தையில் அதன் நிலையை மேலும் பலப்படுத்தும் என்று கூறினார்.

இந்த 7 நாடுகளை தவிர, துருக்கி, தென்னாப்பிரிக்கா, குவைத், கயானா, கனடா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன, இது இந்திய தொழிலாளர்களின் உலகளாவிய தேவையை சுட்டிக்காட்டுகிறது. மேலும், ஐடிஐ (தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள்), டிப்ளமோ மற்றும் பட்டதாரி நிலை தொழிலாளர்களுக்கான தேவை அதிகரித்து வருவதாகவும் இந்த குறிப்பிட்ட துறைகளில் அடிப்படை திறன்களை கொண்ட(Semi-skilled labour) தொழிலாளர்களுக்கும் அதிக தேவை உள்ளது என்றும் பகுப்பாய்வில் தெரிவிக்கப்பட்டது.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த டிப்ளமோ பட்டதாரிகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், ஆட்சேர்ப்பு செய்பவர்கள் பொது கல்வித் தகுதிகளை விட சிறப்பு தொழில்நுட்ப திறன்களைக் கொண்டவர்களை விரும்புவதாகவும் அதிகாரி குறிப்பிட்டார். தற்போது ஓமானில் சுமார் 530,000, கத்தாரில் சுமார் 900,000, ஜப்பானில், கிட்டத்தட்ட 45,000 மற்றும் ஜெர்மனியில் சுமார் 150,000 இந்தியத் தொழிலாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+