பெங்களூரு: ஊழியர்கள் பணி நீக்கம் என்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது .நிறுவனங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்கின்றன. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இதுதான் தற்போது நடக்கிறது. பணி பாதுகாப்பு என்பது மிகப்பெரிய கேள்வியாக மாறியிருக்கிறது.
அப்படித்தான் பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் மொத்த டீமே பணிநீக்கம் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த ஒரு தொழில்நுட்ப நிபுணர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவு தற்போது பணிச்சூழல்கள் எப்படி பாதுகாப்பில்லாதவையாக மாறி இருக்கிறது என்பதை விவரிக்கிறது. ரெடிட் தளத்தில் பதிவு செய்துள்ள பெங்களூருவை சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர் எப்படி இரண்டே வாரங்களில் தன்னுடைய வாழ்க்கை தலைகீழாக மாறிப்போனது என்பதை குறிப்பிட்டு இருக்கிறார்.

அந்த நபர் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அந்த நிறுவனம் ஒரு செயலியை அறிமுகம் செய்ய இருப்பதாக இருந்தது. இதற்காக ஒரு குழுவாக அனைவரும் வேலை செய்து இருக்கின்றனர். இந்த நபர் அந்த வேலையில் சேர்ந்து இரண்டு வாரங்களே ஆகிறது. ஆனால் திடீரென இந்த செயலியை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்போவதில்லை என அறிவித்து மொத்த டீமையே வேலையிலிருந்து நீக்கி உள்ளனர். முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை திரும்ப பெற்றுக் கொண்டதாகவும் நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவுகள் சரியாக இல்லாததாலும் இந்த செயலியை அறிமுகம் செய்யும் முடிவை நாங்கள் கைவிடுகிறோம் என நிறுவனம் சார்பில் திடீரென அறிவித்தார்களாம்.
இதனால் அந்த குறிப்பிட்ட செயலிக்கான டீமில் வேலை செய்து கொண்டிருந்த அனைவரையும் பணி நீக்கம் செய்துள்ளனர். தற்போது தன்னுடன் பணியாற்றிய பலரும் வேலை தேடி வேறு நிறுவனங்களுக்கு விண்ணப்பம் செய்திருப்பதாக அவர் பதிவு செய்துள்ளார். என்னுடைய பணி அனுபவத்திற்கு ஏற்ற வேலை இருந்தால் தயவு செய்து எனக்கு கூறுங்கள் என அவர் ரெடிட் தளத்தில் பதிவு செய்துள்ளார். ஐடி துறையில் தான் நிபுணத்துவம் பெற்று இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
முன்னதாக 54 வயதான ஒரு ஐடி நிபுணர் வெளியிட்ட ரெடிட் பதிவில் தற்போது பணி பாதுகாப்பு என்பது பெரிய கேள்விக்குறியாகிவிட்டது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நிறுவனங்கள் உங்களை வேலையில் இருந்து நீக்கும் , குறிப்பாக எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வேலையிலிருந்து நீக்குவார்கள் என கூறியுள்ளார். தற்போது தங்களுடைய இருபதுகள் மற்றும் முப்பதுகளில் வேலைக்கு செல்வோர்கள் நன்றாக சம்பாதித்து பணத்தை சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் 40 வயதை கடந்து விட்டால் உங்களுக்கான பணி பாதுகாப்பு என்பது சுருங்கிவிடும் என தெரிவித்துள்ளார். கடன் வாங்காதீர்கள் , பணத்தை முதலீடு செய்து வைத்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கை தொடர்கதையாகி வருவதால் ஊழியர்கள் எப்போதுமே அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு தேவையான பணத்தை வங்கி கணக்கில் தயாராக வைத்திருக்க வேண்டும், தொடர்ந்து பணி சார்ந்த திறன்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்படுகிறது.
More From GoodReturns

16 வருஷமா பார்த்த வேலை இப்போ இல்ல.. ஒரே ஈமெயிலில் மாறி போன வாழ்க்கை.. கண்ணீர் சிந்தும் ஐடி ஊழியர்!!

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

பெங்களூருவில் வீடு வாங்கி லாபம் பார்க்கணுமா? இந்த ஏரியால தான் செம வளர்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications