ஹரியாணா மாநிலத்தில் இப்போது வேலையில்லா கொடுமை தலைவிரித்தாடுகிறது, இந்த பிரச்னையை சரியாகக் கையாளத் தெரியவில்லை என்ற கடும் விமரிசனங்கள் அந்த மாநில அரசு மீது குவிகிறது. இந்த நிலையில் வேலையில்லாத் திண்டாட்டத்தை சமாளிக்கப் புதுமையான வழிமுறையை ஹரியாணா அரசு கையில் எடுத்துள்ளது.
இப்போது இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடும் மோதல் நடைபெறுகிறது. இதனால் காசா ஸ்ட்ரிப் பகுதியிலும் இஸ்ரேலிலும் ஏராளமான கட்டடங்கள் வெடிகுண்டு தாக்குதலால் தரைமட்டமாகிவிட்டன. இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டில் அந்நாட்டு அரசு புதிய கட்டுமானப் பணிகளைத் தொடங்கியுள்ளது.\

ஆனால் தாக்குதல் பயத்தால் அங்கு கட்டுமான வேலைக்கு வர தொழிலாளர்கள் பயப்படுகின்றனர். இதனால் கட்டுமானப் பணிகளைத் தொடங்க முடியாமல் இஸ்ரேல் அரசும் திண்டாடி வருகிறது. குறைந்தபட்சம் கட்டுமானப் பணியில் முன்அனுபவம் உள்ள 10,000 பேராவது தேவைப்படுகிறது.
இதைக் கேள்விப்பட்டு இஸ்ரேல் அரசுக்கு கட்டுமானப் பணியாளர்களை தேர்வு செய்ய ஹரியாண அரசு முன்வந்துள்ளது. இதைத் தொடர்ந்து இஸ்ரேலில் பணிபுரிய கட்டுமானப் பணியில் முன்அனுபவம் உள்ளவர்களை தேடிப்பிடிக்கும் வேலையில் ஹரியாணா அரசு மும்முரமாக இறங்கிவிட்டது.
அந்த மாநில அரசின் பொதுத்துறை வேலைவாய்ப்பு நிறுவனமான ஹரியாணா கௌஷல் ரோஜ்கர் நிகாம் மூலம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இஸ்ரேலுக்கு கட்டுமானப் பணியாளர்களை தேர்வு செய்யத் தொடங்கியுள்ளது.
இந்த வேலைக்கு குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். கட்டுமானப் பணியில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். 25 வயது முதல் 54 வயதுக்குட்பட்டவர்கள் வேலைக்கு வரலாம். இஸ்ரேல் பண மதிப்பில் 6100 சம்பளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் மாதத்துக்கு ரூ.1.34 லட்சமாகும்.
தொழிற்சாலை கட்டுமான பணிகள், மர வேலைகள், சுவர் மற்றும் தரைக்கு செராமிக் டைல் பொருத்தும் வேலை, பிளாஸ்டரிஸ் வேலை, கம்பி கட்டும் வேலை ஆகியவற்றுக்கு அதிகப் பணியிடங்கள் உள்ளன.
அத்துடன் வேலைக்கு சேர்பவர்கள் கட்டுமான பிளான்களைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.
இஸ்ரேலில் நடைபெறும் மோதல்களால் பாலஸ்தீனத்தை சேர்ந்த 90,000 தொழிலாளர்களின் வேலை பெர்மிட் ரத்து செய்யப்பட்டுள்ளதால்தான் இந்த ஆட்பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேலிய பில்டர்ஸ் அசோசியேஷன் தரப்பில் இருந்து இந்தியவிடம் ஆட்கள் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது பாலஸ்தீனத் தொழிலாளர்களுக்கு மாற்றாக இந்தியக் கட்டுமானப் பணியாளர்களை அனுப்புவது குறித்து மத்திய அரசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே எந்தவிதப் பேச்சும் நடைபெறவில்லை என்று வெளியுறவுத்துறை இணையமைச்சர் வீ முரளிதரன் மறுத்துள்ளார்.
ஹரியாணாவில் வேலையின்மை 2014இல் இருந்து 314 சதவீதம் அதிகரித்துள்ளது தொடர்பாக காங்கிரஸ் எம்பி கே சி வேணுகோபால் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் முரளிதரன் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஹரியாணா மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் அந்த மாநிலத்தில் பல மாவட்டங்களைச் சேர்ந்த 5,43,874 இளைஞர்கள் வேலை கேட்டு அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜிந்த் மாவட்டத்தில் வேலை கேட்டு அதிகபட்சமாக 52,089 விண்ணப்பங்களும், கைதலில் 47,593 விண்ணப்பங்களும், ஹிஸாரில் 46,453 விண்ணப்பங்களும் இன்னும் பிற மாவட்டங்களிலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் ஆட்சேர்ப்பு தவிர, துபைக்கு 50 பௌன்சர்கள்(அடியாட்கள் அல்லது முரட்டு பாதுகாவலர்கள்), 120 ஸ்டாப் நர்ஸ்கள் பணியிடங்களுக்கும் ஆட்களைக் கேட்டு ஹரியாணா அரசு விளம்பரம் செய்துள்ளது. இதன்மூலம் பலதரப்புகளில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்கலாம் என்று ஹரியாணா அரசு கூறியுள்ளது.
தில்லுக்கு துட்டு! இஸ்ரேலுக்கு போக விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications