சென்னை: இன்றைக்கு பல துறையில் வேலை இருக்குமோ இருக்காதோ என்று நாம் ஒரு பக்கம் தவித்தாலும் இன்னொரு பக்கம் உணவுத்தொழில் மிக வேகமாக வளர்ந்துவருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
அதிலும் சமையல் மாஸ்டர்களுக்கும், பரோட்டா போடத்தெரிந்தவர்களுக்கும், நூடுல்ஸ், பிரைடு ரைஸ், காளான் உள்ளிட்ட பாஸ்புட் உணவுகள் போடத்தெரிந்தவர்களுக்கு தமிழகம் முழுவதும் தற்போது நிறைய தட்டுப்பாடு உள்ளது.
சமையல் தொழில் என்பது உன்னதமான சேவை தொழில். நல்ல உணவு சமைப்பவர்களுக்கு சென்னை. கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி, என அனைத்து பெரிய ஊர்களிலுமே பெரிய அளவில் தட்டுப்பாடு உள்ளது.
மாஸ்டர்கள்
பல ஆயிரம் பேர் கையேந்தி பவன்களிலும், சிறிய ஓட்டல்களிலுமே சாப்பிடுகிறார்கள். இந்த ஓட்டல்களுக்கு போதிய சமையல் மாஸ்டர்கள் கிடைப்பது இல்லை என்று ஓட்டல் வைத்துள்ள பலர் கூறுவதை கேட்க முடிகிறது.
நல்ல ஊதியம்
அதனால் அவர்கள் வடஇந்தியர்களை இறக்கி தொழில் சொல்லிக்கொடுத்து நல்ல ஊதியம் மற்றும் விடுதி வசதி செய்து கொடுத்து வைத்துக்கொள்கிறார்கள். நம்மூர் சமையல் மாஸ்டர்கள் மிக குறைவாக வேலை செய்தவாக சொல்கிறார்கள்.
விடுமுறை
குடிப்பழக்கம் பெரிய பிரச்சனையாக இருப்பதாக ஓட்டல் உரிமையாளர்கள் சொல்கிறாரகள். சிலருக்கு நன்கு சமைக்க தெரிந்தாலும், இரவில் குடித்துவிட்டு, காலையில் ஒழுங்காக வேலைக்கு வருவதில்லை, அடிக்கடி குடித்துவிட்டு விடுமுறை எடுப்பதகாவும் ஓட்டல் உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இதன் காரணமாக வடஇந்தியர்களை இறக்கி வேலை செய்யும் நிலை ஏற்படுவதாக கூறுகிறார்கள்.
நல்ல ஊதியம்
இது ஒருபுறம் எனில் கேட்டரிங் படித்து சமையல் கலையில் வல்லவர்களாக இருந்தால் பல ஆயிரங்களை கொட்டிக்கொடுத்து வேலைக்கு சேர்க்க பெரிய ஓட்டல்கள் காத்துக்கிடக்கின்றன.
பரோட்டா மாஸ்டர்
மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பரோட்டோ போடத் தெரிந்தவர்களுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது. போதிய ஆட்கள் கிடைப்பதில்லை என்று சொல்கிறார்கள். இந்த தொழிலை சரியாக கற்றுக்கொண்டால் மாதம் குறைந்த பட்சம் 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கூட சம்பாதிக்க முடியும்.
உணவு படிப்பு
இதேபோல் நன்றாக அசைவ மற்றும் சைவ உணவுகளை மணமாக ருசியாக சமைக்கக தெரிந்தவர்களுக்கு தமிழகம் முழுவதுமே பெரிய அளவில் வேலை வாய்ப்பு உள்ளது. எல்லா உணவங்களுமே தமிழகத்தில் தங்கள் கிளைகளை தற்போது வேகமாக அதிகரித்து வருகின்றன. ஆனால் அதற்கு ஏற்ப அவர்களுக்கு நல்ல சமையல் மாஸ்டர்கள் கிடைப்பதில்லை. எனவே உணவுத்தொழிலை கற்றுக்கொள்ளும் படிப்பை முடிப்பவர்களுக்கு வரும் ஆண்டுகளில் சிறப்பான எதிர்காலம் இருக்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications