இந்தியா மற்றும் உலகின் பல நாடுகளில் பிரபலமாக இருக்கும் உள்ளாடை பிராண்ட் ஜாக்கி-யின் உரிமம் பெற்ற ஓரே நிறுவனமான பேஜ் இண்டஸ்ட்ரீஸ் தெலுங்கானாவில் இரண்டு புதிய தொழிற்சாலைகளை அமைக்கச் சுமார் 290 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
தென்னிந்திய மாநிலங்கள் அடுத்தடுத்து புதிய நிறுவனங்கள், முதலீடுகளை ஈர்த்துத் தத்தம் மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கத் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
இந்த நிலையில் தெலுங்கானா முன்னோடியாகக் குறுகிய காலகட்டத்தில் பல துறையில் நிறுவனங்களையும், முதலீடுகளையும் ஈர்த்து வருகிறது.
ஜாக்கி பிராண்ட்
ஜாக்கி பிராண்டின் இந்திய உற்பத்தியாளரான பேஜ் இண்டஸ்ட்ரீஸ் தெலுங்கானாவில் இரண்டு புதிய தொழிற்சாலைகளை அமைக்கச் சுமார் 290 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது. இவ்விரு தொழிற்சாலை மூலம் 7000 உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க உள்ளது.
கே.டி.ராமராவ்
இத்தொழிற்சாலைகளில் ஆடை உற்பத்தி மட்டும் அல்லாமல் பேஜ் இண்டஸ்ட்ரீஸ் கீழ் இருக்கும் மற்ற பிராண்டின் sports wear மற்றும் athleisure ஆடைகளையும் உற்பத்தி செய்ய உள்ளது என்று தெலுங்கானா மாநிலத்தின் தொழில்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமராவ் தெரிவித்துள்ளார்.
1 கோடி ஆடைகள்
இதுகுறித்துக் கே.டி.ராமராவ் வெளியிட்ட டிவீட்டில் பிரபலமான உள்ளாடை பிராண்டான ஜாக்கி (பேஜ் இண்டஸ்ட்ரீஸ்) இப்ராஹிம்பட்டினம் மற்றும் முழுகு-வில் ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகளை நிறுவி, 1 கோடி ஆடைகளை உற்பத்தி செய்ய உள்ளது.
7000 பேருக்கு வேலை
இதேபோல் இப்ராஹிம்பட்டினம் மற்றும் முழுகு பகுதியில் அமையப்படும் தொழிற்சாலையில் சுமார் 7,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கே.டி.ராமராவ் ட்வீட் செய்துள்ளார்.
இப்ராஹிம்பட்டினம்
இப்ராஹிம்பட்டினத்தில் அமைய உள்ள பேஜ் இண்டஸ்ட்ரீஸ்-ன் தொழிற்சாலையை ஒயிட்கோல்ட் ஸ்பின்டெக்ஸ் பார்க்-ஆல் கட்டப்பட்ட உள்ளது. இந்தத் தொழிற்சாலை 1.5 லட்சம் சதுர அடியில் பிளக் அண்ட் பிளே வசதியாக இருக்கும்.
குத்தகை
இத்தொழிற்சாலை கட்டி முடிக்கப்பட்ட உடன் பேஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்குக் குத்தகைக்கு விடப்படும், இந்தத் தொழிற்சாலையில் மட்டும் 3,000 பேருக்கு வேலை வழங்கப்பட உள்ளது.
முலுகு
முலுகு-வில் (சித்திப்பேட்டை) சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் பேஜ் இண்டஸ்ட்ரீஸ் சொந்தமாக ஒரு தொழிற்சாலையை உருவாக்க உள்ளது. இந்தத் தொழிற்சாலை மூலம் சுமார் 4,000 பேருக்கு வேலை கிடைக்கும் என அமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு
2007 முதல் மும்பை பங்குச்சந்தையில் இருக்கும் பேஜ் இண்டஸ்ட்ரீஸ் ஏற்கனவே பெங்களூர், ஹாசன், மைசூர், கவுரிபிதனூர், திப்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகளில் தொழிற்சாலையை வைத்துள்ள நிலையில், தற்போது புதிதாக 2 தொழிற்சாலைகள் தெலுங்கானாவில் அமைக்கப்பட உள்ளது. பேஜ் இண்டஸ்ட்ரீஸ் தமிழ்நாட்டின் டெக்ஸ்டைல் நகரமான திருப்பூரில் தொழிற்சாலை வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications