ஒரு தொழிலை தொடங்குவதற்கு தான் தைரியம் வேண்டும். அதுவே தொழிலை தொடங்கி.. அதன் நுட்பங்களை கண்டுபிடித்துவிட்டால் உங்களுடைய வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. அப்படி இதற்கு முன்னர் சாதித்துக் காட்டிய பலரின் கதைகளை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் அப்படிப்பட்ட ஒரு கதையை தான் பார்க்கவுள்ளோம். ஜோத்பூரைச் சேர்ந்த ஒருவர் குக்கீஸ்களை தயார் செய்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இதன் மூலம் ரூ. 1.5 கோடிக்கும் மேல் வருமானம் பெறுகிறார்.
2009-ஆம் ஆண்டு தனது எம்பிஏ பட்டத்தை முடித்த பிறகு அமித் சோனிக்கு ஒரு பேக்கரியில் மேனேஜர் வேலை கிடைத்தது. ஆனால் மற்ற தொழிற்சாலைகளைப் போல் அல்லாமல் மரத்தால் ஆன பாரம்பரிய அடுப்புகளை பயன்படுத்தும் ஒரு தொழிற்சாலையாக இருந்ததால் எப்போதும் வேண்டுமானாலும் இடிந்து விழும் வகையில் இருந்துள்ளது.

எனவே இதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று அந்த தொழிற்சாலையின் முதலாளிகள் விரும்பியுள்ளனர். இதற்காக ஏதேனும் முயற்சிகளை மேற்கொள்ளும்படி அமித்திடம் கூறியுள்ளனர். இதற்காக அமித் பிரிட்டானியா, பார்லே-ஜி யூனிபிக் போன்ற பிஸ்கட் பிராண்டுகளின் தொழிற்சாலைகளை பார்வையிட சென்றிருக்கிறார்.
இதன் மூலம் பேக்கரி வணிகம் தொடர்பான விவரங்கள் அவருக்கு கிடைத்துள்ளது. அதன் பிறகு பேக்கரியை அழகாக புதுப்பித்து ஸ்டாக்கிங் செய்வது முதல் மார்க்கெட்டிங் செய்வது வரை அனைத்திலும் பணியாற்றியுள்ளார். அதோடு அமித் பணிபுரிந்த தொழிற்சாலை தானியங்கி அமைப்பாக மாறியது. 2009 முதல் 2016 வரை பேக்கேஜிங் மற்றும் மார்க்கெட்டிங் உட்பட அனைத்து அம்சங்களிலும் பணியாற்றினார். அப்போதுதான் தானும் ஒரு தொழில் முனைவோராக ஆக வேண்டும் என்ற எண்ணம் அமித்திற்க்கு வந்தது.
எனவே அவர் பணி புரிந்த நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார். அதற்காக உரிமையாளர்களிடம் கூறும்போது தொழிற்சாலை உரிமையாளர்கள் கிட்டத்தட்ட 10 மாதங்கள் எடுத்து அவரை விடுவித்தனர். அதன் பிறகு அமித் கிட்டத்தட்ட ஒரு வருடம் பேக்கிங் மற்றும் சமையல் பற்றி கற்றுக் கொண்டார்.
2017-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரையில் மும்பையின் IHM-மில் பேக்கரி செஃப் கோர்ஸ் மற்றும் ஸ்கில் இந்தியாவில் இருந்து 2 கோர்ஸ்கள் உட்பட பல கோர்ஸ்களை எடுத்து படிக்கத் தொடங்கினார். 2018-ஆம் ஆண்டு நவம்பர் 12-ஆம் தேதி அன்று தனது தந்தை ரமேஷ் தாய், துர்கா ஆகியோரின் பெயரில் உள்ள முதல் ஆங்கில எழுத்தை எடுத்து, அவற்றுடன் அவர்களின் திருமண ஆண்டான 1983-யும் சேர்த்து RD'z 1983 என்ற நிறுவனத்தை அமைத்தார்.
இன்று அமேசான், மீஷோ போன்ற தளங்களில் விற்பனை செய்வதைத் தவிர இந்தியா முழுவதும் 15-க்கும் மேற்பட்ட ஹோட்டல்களுக்கு 6 வகையான திணை மாவை கொண்டு செய்யப்படும் குக்கீஸ்களை விற்பனை செய்து வருகிறார். அமித் பஹ்ரைன் மற்றும் துபாய் போன்ற நாடுகளுக்கும் குக்கீஸ்களை ஏற்றுமதி செய்கிறார். அவற்றுக்கான மாதிரி சோதனை தற்போது ஜெர்மனி இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளில் நடந்து வருகிறது.
தினை மாவில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்து பொருட்கள் உள்ளன. திணை உணவு பொருட்களில் இருந்து மட்டுமே 2024-ஆம் நிதியாண்டில் RD'z நிறுவனம் ரூ.1 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது.
இந்த ஆண்டு தனது வருவாய் இலக்கை ரூ.1.5 கோடியாக நிறுவனம் கணித்துள்ளது. ஜோத்பூரில் மற்றொரு புதிய தொழிற்சாலையையும் அமைத்து வருகின்றனர். 2027 நிதியாண்டுக்குள் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.20 கோடியை எட்டும் என்று எதிர்பார்ப்பதாக அமித் கூறியுள்ளார்.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications