ஜோத்பூர்: இந்தியாவின் பல பகுதிகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக ஏசி விற்பனை எதிர்பாராத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஏசிக்கான தேவை அதிகரித்து, சந்தையில் அவற்றின் இருப்பு குறைந்து வருகிறது. இந்த அதிகரித்த தேவை காரணமாக, ஜூன் மாதத்தில் ஏசிக்கான விலைகள் 6-8% வரை உயர்ந்துள்ளன. இதனால், வெப்பத்தின் தாக்கத்தை குறைப்பதற்காக மக்கள் பல்வேறு வழிமுறைகளை கையாள வேண்டியுள்ளது. அதற்கு சான்றாக ஜோத்பூரை சேர்ந்த ஒருவர் தனது ஸ்கூட்டரிலேயே ஷவர் அமைத்துள்ளார்.
நம்மில் பலர் கடுமையான வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு ஏர் கூலர்கள், ஏர் கண்டிஷனர்கள், பேன் போன்றவற்றைப் பயன்படுத்துவோம். ஆனால் ராஜஸ்தான் ஜோத்பூரில் உள்ள ஒரு நபர் ஒரு புதுமையான வழியை கண்டுபிடித்துள்ளார். அதனை பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும். இந்த யோசனையை பலர் பாராட்டி வருகின்றனர். இவர் இருசக்கர வாகனத்தில் தற்காலிக மழையை கொண்டு வந்துள்ளார். மேலும் இவரது வீடியோ இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில் ஒரு நபர் ஸ்கூட்டரில் சென்று கொண்டே குளிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. தனது ஸ்கூட்டரில் ஷவரின் அமைப்பை போன்ற ஒன்றை அந்த நபர் வடிவமைத்துள்ளார். ஒரு பைப் மற்றும் ஷவரை நீல நிற கேனுடன் இணைத்துள்ளார். அவருடைய இந்த செயலை பலர் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். சிலர் அவரை தங்களுடைய கேமராக்களை கொண்டு புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
வெயில் கடுமையாக இருக்கும் பொழுது இருசக்கர வாகனத்தில் செல்வது கடினம்தான். ஏனெனில் இந்த வெயிலின் காரணத்தால் அனல் காற்று அதிகமாக இருக்கும். இவர் தற்பொழுது இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுதே வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்கு இப்படி ஒரு யோசனையை கண்டறிந்துள்ளார். இவருடைய இந்த செயலைக் கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.
Fun with Singh என்ற இன்ஸ்டாகிராம் பேஜில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஜூன் 3ம் தேதி இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ, 22 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து லைக்ஸ்களை குவிக்கிறது. மேலும் இந்த வீடியோவை கண்ட பலர் அவர்களுடைய கருத்துக்களை கூறி வருகின்றனர்.
நீ கண்டுபிடித்த இந்த டெக்னிக், இந்தியாவை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று ஒருவர் நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்துள்ளார். மற்றொருவர் " man rocked people shocked"என்று கமெண்ட் செய்துள்ளார். வெப்பத்தை போக்குவதற்கு இது ஒரு சிறந்த யோசனை என்று மற்றொரு இன்ஸ்டாகிராம் பயனர் கூறியுள்ளார். இதுபோன்று பல மக்கள் அவர்களுடைய சொந்தக் கருத்தினை இந்த வீடியோவின் கமெண்ட் பாக்ஸில் பதிவிட்டு வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ " fun with singh" என்ற ID-யில் garmi go என்ற தலைப்பில் பகிரப்பட்டு வருகிறது. நீங்களும் இந்த வீடியோவை பார்க்க வேண்டும் என்றால் மேலே குறிப்பிட்ட ID-யில் சென்று பார்க்கலாம். அந்த வீடியோவில் ஒருவர் மஞ்சள் டீ-ஷர்ட் அணிந்து ஸ்கூட்டர் பயணிக்கும் பொழுதே நனைவது போன்று காணப்படும். அந்த வீடியோவை கிளிக் செய்து நீங்கள் முழு வீடியோவையும் பார்க்கலாம். இதனை மக்கள், பயண குளியல் என்று கூறி வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications