அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து 48 மணிநேரத்தில் 2 முக்கிய வங்கிகள் திவாலாகியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க நிதியியல் சந்தை, ஸ்டார்ட்அப் மீது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவியதை தொடர்ந்து, பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஞாயிற்றுக்கிழமை பணத்திற்கு உத்தரவாதம் கொடுத்துள்ளார்.
Recommended Video
அமெரிக்காவில் சிலிக்கான் வேலி பேங்க், சிக்னேச்சர் பேங்க் ஆகிய இரு வங்கிகள் 48 மணிநேரத்தில் திவாலாகியுள்ளது. இதனால் 200 பில்லியன் டாலருக்கும் அதிகமான டெபாசிட்கள் இவ்விரு வங்கிகளும் முடங்கியுள்ளது. இதில் பெரும்பாலான பணம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், வென்சர் கேப்பிடல் நிறுவனங்கள், முதலீட்டாளர்களுடையது.
அமெரிக்க சட்ட விதிமுறைகள் படி டெபாசிட் இன்சூரன்ஸ் தொகையாக 250000 டாலர் மட்டுமே பெற முடியும், இது வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தை சீரழித்துவிடும் என்பதை உணர்ந்த அமெரிக்க அரசு ஞாயிற்றுக்கிழமை முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு அனைத்து தரப்பினர் வயிற்றில் பாலை வார்த்தது.
சிலிக்கான் வேலி பேங்க், சிக்னேச்சர் பேங்க்
சிலிக்கான் வேலி பேங்க், சிக்னேச்சர் பேங்க் சரிவுக்கு பின்பு பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வங்கி தோல்விக்கு காரணமானவர்கள் மீது முழு பொறுப்பு உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். வங்கி வீழ்ச்சிக்கு பின்பு வங்கி அமைப்பில் நம்பிக்கையை அதிகரிக்க அமெரிக்க அரசு தொடர்ச்சியான அவசர நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது.
ஜோ பைடன்
பெரிய வங்கிகளின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேம்படுத்தப்படும் இதனால் மீண்டும் இந்த நிலை உருவாகாது என நான் உறுதியாக இருக்கிறேன் என்று ஜோ பைடன் கூறினார்.
அமெரிக்க வங்கி கட்டுப்பாட்டு ஆணையம்
இதுமட்டும் அல்லாமல் அமெரிக்க வங்கி கட்டுப்பாட்டு ஆணையம் சிலிக்கான் வேலி பேங்க்-இன் வாடிக்கையாளர்கள் அனைவரும் திங்கள்கிழமை முதல் அவர்களின் அனைத்து வைப்புத் தொகைகளுக்கும் அணுகவும் வெளியேற்றவும் முடியும் என அறிவித்துள்ளனர்.
அவசரகால நிதி
இதற்காக அமெரிக்க அரசு இவ்வங்கிக்கு அவசரகால நிதி வழங்குவதற்கு கட்டுப்பாட்டாளர்கள் புதிய வசதியை அமைப்பார்கள் என்றும் தெரிவித்தனர். கூடுதலாக பெடரல் ரிசர்வ் வங்கிகள் அவசர காலங்களில் கடன் வாங்குவதை எளிதாக்கியது. இதன் மூலம் சிலிக்கான் வேலி பேங்க்-இன் வாடிக்கையாளர்களின் பணத்திற்கு முழுமையாக உத்தரவாதம் கொடுக்கப்பட்டு உள்ளது.
மொத்த பணமும் பாதுகாப்பு
சிலிக்கான் வேலி பேங்க்-இன் வாடிக்கையாளர்கள் மொத்தமாக பணத்தை வெளியேற்றினாலும் அதற்காக அமெரிக்க பெடரல் ரிசர்வ் போதுமான நிதியை அவசரகால நிதியாக உட்செலுத்தும். மேலும் அமெரிக்க கருவூல செயலாளரும் மற்றும் தேசிய பொருளாதார அமைப்பின் தலைவரும் வங்கி கட்டுப்பாட்டு அமைப்புகளிடம் பேச்சுவார்த்தை நடத்த துவங்கியுள்ளது.
டெபாசிட்
சிலிக்கான் வேலி பேங்க் சுமார் 210 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு மற்றும் 175 பில்லியன் டாலர் மதிப்பிலான டெபாசிட் உடன் திவாலாகியிருக்கும் வேளையில், ஞாயிற்றுக்கிழமை திவாலாகியுள்ள Signature Bank சுமார் 110.36 பில்லயன் டாலர் சொத்து மதிப்புடனும், 88.59 பில்லியன் டாலர் தொகை டெபாசிட் தொகையை கொண்டு திவாலாகியுள்ளது.
இந்திய ஸ்டார்ட்அப் துறை
இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களும், இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்யும் வென்சர் பண்ட் மற்றும் PE முதலீட்டு நிறுவனங்களும் சிலிக்கான் வேலி பேங்க்-ல் பெரும் தொகையை வைத்துள்ளது. தற்போது அமெரிக்க அரசு உத்தரவாதம் கொடுக்காமல் இருந்தால் குறைந்தது 100000 பேர் பணிநீக்கம் செய்யப்படலாம். பல வென்சர் கேப்பிடல் பண்ட் நிறுவனங்கள் மூடப்படவும் அதிக வாய்ப்பு உள்ளது.
மேலும் இந்த உத்தரவாதம் அனைத்தும் சிலிக்கான் வேலி பேங்க்கிற்கு மட்டும் தான், சிக்னேச்சர் பேங்க் குறித்து இனி தான் முடிவு எடுக்கப்படும்.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications