அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்நிலையில் தேர்தல் களம் நாளுக்கு நாள் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. ஏனெனில் அமெரிக்காவில் எந்த முடிவு எடுத்தாலும், அது சர்வதேச தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே ஜோ பைடன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் ஜோ பைடன் தனக்கு கொரோனா இருப்பதாகவும் சாமானிய மக்களுக்கு 2025 உதவாது என்றும் கூறி தனது அதிகாரப்பூர்வ X பிளாட்பார்மில் போஸ்ட் பதிவிட்டுள்ளார்.
வரும் நவம்பர் 5-ஆம் தேதி என்று அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. ஏனெனில் அமெரிக்க சந்தையில் ஏற்படும் ஒரு சிறு நிகழ்வும், பிற நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அமெரிக்கா பொருளாதாரத்தில் மிகப்பெரிய நாடாக இருக்கிறது. எனவே அங்கு நடக்கும் விஷயங்கள் மற்ற நாடுகளையும் பாதிக்கும்.

இந்நிலையில் பிரச்சாரத்தில் இருந்தபோது டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் சீக்ரெட் சர்வீஸ் வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அடுத்ததாக தற்போது ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இருவரும் தற்போது நலமுடன் இருக்கின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக பிரச்சாரத்திற்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் ஜோ பைடன், தற்போது X தளத்தில் சில போஸ்ட்களை பதிவிட்டுள்ளார். அதில் தனக்கு கொரோனா தொற்று இருப்பதால் வீட்டில் இருப்பதாகவும், இதனால் RNC-யில் டொனால்ட் டிரம்ப் ஆற்றிய உரையை பார்க்க முடியாமல் போனதாகவும் கூறியுள்ளார்.
அதன் பிறகு கோவிட் சமயத்தில் டொனால்ட் ட்ரம்ப் என்ன செய்தார்? என்பதிலிருந்து முதலில் ஆரம்பிக்கலாம் என்று கூறிய ஜோ பைடன்.. "மக்களே ஒரு மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் இறந்த போது ப்ளீச் ஊசி போட சொன்னவர், இதே டொனால்ட் டிரம்ப் தான். அதன்பின் டொனால்ட் டிரம்ப பாதுகாப்பு மற்றும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பை முன்னெடுத்துச் செல்வதாக கூறியுள்ளார். இது அப்பட்டமான பொய். டிரம்ப் பதவியில் இருக்கும் ஒவ்வொரு ஆண்டும் சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவ காப்பீட்டை குறைக்கவே முன்மொழிந்தார்.
மேலும் அவர் தனது பில்லியனர் நண்பர்களுக்காக உதவும் வகையில் வரி குறைப்புகளை வழங்குவதை பற்றி தற்பெருமை காட்டிக் கொண்டுள்ளார். இவரது ப்ராஜெக்ட் 2025 நடுத்தர வர்க்கத்தின் மீது நிச்சயமாக வரிகளை உயர்த்தும். அதேபோல EV உற்பத்தி முக்கியமானது அல்ல என்றும் கூறியுள்ளார்.
ஆனால் எனது நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவில் EV உற்பத்தி பெருகி வருகிறது. டிரம்ப் அனைத்து உற்பத்தி சார்ந்த வேலைகளையும் திரும்பக் கொண்டு வருவதாகக் கூறினார். எனது நிர்வாகத்தின் மூலம் 80,00,000 லட்சம் புதிய வேலைகள் வளர்ந்து வருகின்றன. டிரம்ப் 2016-இல், இதே தான் கூறினார். கூறிவிட்டு அதன் பிறகு தோல்வியடைந்தார் என்று அவரைக் கேள்வி எழுப்பும் விதமாக சில போஸ்ட்களை பகிர்ந்து உள்ளார்.
ட்ரம்பின் இந்த ப்ராஜெக்ட் 2025 மற்றும் "Make America Great Again" என்ற பெயரில் உள்ள திட்டங்கள் யாவும் எதார்த்தமாக இல்லை. அவை சாமானிய மக்களுக்கு உதவாது என்று ஜோ பைடன் வீட்டில் இருந்தே போஸ்ட்களை பதிவிட்டு வருகிறார். மேலும் நவம்பரில் நடைபெற உள்ள தேர்தலில் டிரம்ப்-ஐ மீண்டும் தோற்கடிக்க உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இருவருக்கும் கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில் யார் இந்த தேர்தலில் வெற்றி பெறுவார்கள்? என்பதை தெரிந்து கொள்ள உலக நாடுகளும் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications