அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தகப் போர் மற்றும் தடைகள் டொனால்டு டிரம்ப் ஆட்சி காலத்தில் மிகவும் மோசமாக இருந்த நிலையில், ஜோ பைடன் ஆட்சியில் புதிய தடைகளும், கட்டுப்பாடுகளும் கணிசமாகக் குறைந்துள்ளது.
இந்நிலையில் அமரிக்கா ரஷ்யா மீதான தடையில் அதிகப்படியான பாதிப்புகளைச் சப்ளை செயின் பிரிவில் எதிர்கொண்டு வரும் நிலையில், அமெரிக்கா சீனா மீது விதித்த சில தடைகளையும், வரி விதிப்புகளையும் நீக்க உள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் தளர்வுகள் மூலம் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகம் மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோ பைடன்
அமெரிக்க அதிபரான ஜோ பைடன் தலைமையிலான அரசு டொனால்டு டிரம்ப் ஆட்சி காலத்தில் சீன பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரி விதிப்புகள் அனைத்தையும் மறு ஆய்வு செய்ய முடிவு செய்து, அதற்கான பணிகளைத் துவங்கியுள்ளது.
அமெரிக்கா-வை போல் சீனாவும் அமெரிக்காவில் இருந்து தன்னாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது வரி விதித்தது குறிப்பிடத்தக்கது.
சீன பொருட்கள்
ஜோ பைடன் அதிபராகப் பதவியேற்ற காலத்தில் இருந்து சீன பொருட்கள் மீதான வரி விதிப்புகளைத் தளர்த்த முயற்சி செய்து வந்த நிலையில், இரு நாடுகள் மத்தியிலான கொள்கை முடிவுகளில் இரு நாட்டு உயர் அதிகாரிகள் மத்தியில் மாறுப்பட்ட கருத்து நிலவியது.
ரெசிஷன்
இந்நிலையில் அமெரிக்கப் பொருளாதாரம் ரெசிஷன் நோக்கிச் சென்று கொண்டு இருக்கும் வேளையில் அமெரிக்கக் கருவூல செயலாளர் ஜேனட் யெல்லன் மற்றும் வர்த்தகச் செயலாளர் ஜினா ரைமண்டோ ஆகியோர் வரி குறைக்கப் பரிந்துரை செய்துள்ளனர்.
எதிர்ப்பு
அமெரிக்கக் கருவூல செயலாளர் ஜேனட் யெல்லன் மற்றும் வர்த்தகச் செயலாளர் ஜினா ரைமண்டோ வரியை குறைக்க ஆதரவு தெரிவிக்கும் இதேவேளையில், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி கேத்தரின் டாய் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோர் சீனா வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்த வரியை குறைக்கக் கூடாது எனக் கூறி வருகின்றனர்.
ஜோ பைடன் முடிவு
இதற்கிடையில் ஜோ பைடன் சீனா பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை குறையும். இதனால் பணவீக்கத்தைக் குறைக்க வழி உருவாகும் எனப் பைடன் நம்புவதால் சீன பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரி விதிப்புகள் அனைத்தையும் மறு ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications