AI வைத்து என்ன செய்துவிட முடியும் என நினைக்கும் பலருக்கு சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா வீடியோ பிரச்சனை பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும், அதைத் தொடர்ந்து ஏஐ பயன்படுத்தி பிரதமர் மோடியின் குரலில் தமிழ் பாட்டு பாடிய வீடியோ பலரையும் கவர்ந்தது.
இப்படி ஏஐ நம்மைத் தினமும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரும் வேளையில் தற்போது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினரும், முன்னாள் மற்றும் இன்னாள் பிரதமர்களை வைத்து டான்ஸ் ஆடும் வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் அரசியலில் பரம எதிரிகள், ஆனால் செயற்கை நுண்ணறிவு அவர்களை மிகவும் நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளது. இருவரும் இணைந்து சல்சா டான்ஸ் ஆடும் வீடியோ தற்போது பெரிய அளவில் வைரலாகியுள்ளது.
உலகளவில் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்களும் AI இசைக்கு நடனமாடியது பலரை கவர்ந்துள்ளது, ஆனால் பல தலைவர்கள் இதை எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இந்த வீடியோவை நீங்களே பாருங்க.
டிஜிட்டல் கிரியேட்டரான யூரி யால்ட்சோவ் (Yurii Yaltsov) உருவாக்கிய இந்த ஏஐ வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட நிலையில் காட்டுத்தீபோலத் தற்போது பரவி வருகிறது. அமெரிக்க ஜனாதிபதிகளின் bromance எனச் சித்தரிக்கப்பட்ட இந்த வீடியோவில் இருவரும் ரஷ்ய இசைக்கு சல்சா டான்ஸ் ஆடும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
ஜோ பைடன் - டொனால்டு டிரம்ப் ஆகியோர் அமெரிக்கக் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் இருவரும் கடந்த தேர்தலின் போது கடுமையாக விமர்சனம் செய்து தேர்தலை எதிர்கொண்டனர். இன்னும் சில மாதங்களில் அமெரிக்காவில் மீண்டும் அதிபர் தேர்தல் நடக்க உள்ள வேளையில் இந்த வீடியோ அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் டிரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications