அமெரிக்காவில் ஜோ பைடன் அரசு உலக நாடுகளில் இருந்து அந்நாட்டிற்கு வரும் மக்கள் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதை நெறிப்படுத்தவும், முறைப்படுத்தவும் பல விசா மற்றும் விசா விண்ணப்பங்கள் மீதான கட்டணத்தை அதிகரித்துள்ளது.
அதிலும் குறிப்பாக வேலைவாய்ப்பு தொடர்பான விசாக்களான ஹெச்-1பி விசா, எல் விசாக்கள் மீதான கட்டணம் பெரிய அளவில் அதிகரிக்கும் திட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு உள்ளது.
இந்தப் புதிய கட்டண விதிப்புகள் மட்டும் அமலாக்கம் செய்யப்பட்டால் இந்திய ஐடி நிறுவனங்களுக்குப் பெரும் தலைவலியாக மாறும்.. இதோடு இந்திய ஐடி ஊழியர்கள் அமெரிக்கா சென்று பணியாற்ற அளிக்கப்படும் வாய்ப்புகள் கணிசமாகக் குறையவும் வாய்ப்பு உள்ளது.
அமெரிக்க அரசு
அமெரிக்க அரசு ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பு அடிப்படையில் பெறப்படும் விசா விண்ணப்ப எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தாலும், அமெரிக்க அரசு வழங்கும் விசா எண்ணிக்கை உயரவில்லை.
ஹெச்1பி விசா
அமெரிக்க அரசு ஹெச்1பி விசா-வை குலுக்கல் முறையில் மட்டுமே அளிக்கும் நிலையில் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுகிறது. இதனால் இந்த விண்ணப்பம் ஆய்வு செய்வதற்கே நீண்ட காலம் தேவைப்படுகிறது. இதனாலேயே சமீபகாலத்தில் அமெரிக்க விசா பெறக் காத்திருப்புக் காலம் ஒரு வருடத்திற்கும் அதிகமாக உயர்ந்தது.
கட்டண உயர்வு
இதைச் சரி செய்யும் வகையில் அமெரிக்க அரசின் தற்போதைய விசா விண்ணப்பங்களின் கட்டணத்தைத் தாறுமாறாக உயர்த்த முடிவு செய்துள்ள ஜோ பைடன் அரசு உதாரணமாக H-1B E-registration fee தற்போது வெறும் 10 டாலர், இதை 2050 சதவீதம் அதிகரித்து 215 டாலராக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் EB-5 investor Petition விண்ணப்பம் தற்போது 3,675 டாலர் மட்டுமே, இதை 204 சதவீதம் உயர்த்தி 11,160 டாலர் வரையில் உயர்த்த திட்டமிட்டு உள்ளது.
வெளிநாட்டு ஊழியர்கள்
பொதுவாக அமெரிக்கா வரும் வெளிநாட்டு ஊழியர்களின் விசா செலவுகள் அனைத்தையும் அமெரிக்க நிறுவனம் தான் ஏற்க வேண்டும், அந்த வகையில் தற்போது அமெரிக்காவில் இருக்கும் நிறுவனங்கள் (இந்திய ஐடி நிறுவனங்களின் அமெரிக்கக் கிளை உட்பட) ஒரு வெளிநாட்டு ஊழியரை பணியில் நியமிக்கும் செலவுகள் பெரிய அளவில் அதிகரிக்கும்.
60 நாள் காலம்
இப்புதிய கட்டணம் கொண்ட அறிக்கையை அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவைகள் அமைப்புச் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இந்த அறிக்கைக்கு 60 நாள் காலம் ஒதுக்கப்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல் பொது மக்களிடம் கருத்துக் கேட்கும், அதன் பின்பு தான் புதிய கட்டணங்கள் அமலாக்கம் செய்யப்படுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.


Click it and Unblock the Notifications