உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சி மற்றும் டிஜிட்டல் கரன்சி குறித்து ஆய்வு செய்து, பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் வல்லரசு நாடான அமெரிக்கா மட்டும் இதில் மௌனம் காத்து வந்தது.
இதற்கிடையில் ரஷ்யா கிரிப்டோகரன்சி மற்றும் டிஜிட்டல் கரன்சி மூலம் உலக நாடுகள் விதித்த கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளை எளிதாகக் களைந்து உலக நாடுகள் உடனும், சர்வதேச நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய முடியும் எனக் கணிப்புகள் இருந்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மிகவும் முக்கியமான உத்தரவில் கையெழுத்திட்டு உள்ளார்.
ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த காரணத்தால் அனைத்து சேவை, வர்த்தகத்திற்கும் தடை விதித்துள்ளார். குறிப்பாக செவ்வாய்க்கிழமை ரஷ்ய கச்சா எண்ணெய், எரிவாயு மீதும் தடை விதித்தும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது அமெரிக்கா. இந்நிலையில் புதன்கிழமை ஜோ பைடன் முக்கியமான உத்தரவை வெளியிட்டு உள்ளார்.
கிரிப்டோகரன்சி
கிரிப்டோகரன்சியை மேற்பார்வை செய்யவும், சொந்தமாக டிஜிட்டல் கரன்சியை உருவாக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யவும், ஆய்வு செய்யவும் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ்-க்கு உத்தரவிட்டுள்ளார் அமெரிக்க அதிபரான ஜோ பைடன்.
டிஜிட்டல் கரன்சி
ஒருபக்கம் உலக நாடுகளில் பெரும்பாலானவை சொந்தமாக டிஜிட்டல் கரன்சியை உருவாக்கும் பணியில் தீவிரமாக இருக்கிறது, குறிப்பாக இந்தியாவில் இரு வகையான டிஜிட்டல் கரன்சி உருவாக்க இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருகிறது. டிஜிட்டல் கரன்சி பயன்பாட்டில் சீனா முன்னோடியாக இருக்கும் நிலையில் அமெரிக்காவும் களத்தில் இறக்கியுள்ளது.
பாதிப்புகள், ஆபத்துக்கள்
நாளுக்கு நாள் கிரிப்டோகரன்சி மீதான முதலீடும், பயன்பாடும் அதிகரித்து வரும் நிலையில், இதில் உள்ள பாதிப்புகளையும், ஆபத்துக்களையும் அரசின் பார்வையில் ஆய்வு செய்யவே இந்த உத்தரவை வெளியிட்டு உள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
அமெரிக்கா சீனா
இந்த உத்தரவு மூலம் இந்தியாவைப் போல் அமெரிக்காவும் கிரிப்டோகரன்சி கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்கி மொத்த சந்தையையும் நிர்வாகம் செய்ய முடியும். ஏற்கனவே சீனா இத்துறையில் இருந்து மொத்தமாக வெளியேறியுள்ள நிலையில் அமெரிக்கா இதில் ஆதிக்கம் செலுத்த முடியும்.
பிட்காயின் விலை
இன்றைய வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு 5.40 சதவீதம் சரிந்து 39,221.86 டாலராக உள்ளது. இதேபோல் எதிரியம் 2586.38 டாலர், டெதர் 1.00 டாலர், பினான்ஸ் 376.04 டாலர், ரிப்பிள் 0.73 டாலர், டெரா 95.60 டாலர், கார்டானோ 0.82 டாலர், சோலானோ 82.52 டாலர், அவலான்சி 72.56 டாலர், டோஜ்காயின் 0.1161 டாலர், ஷிபா இனு 0.0000229 டாலராக உள்ளது. இன்று காலை வர்த்தகத்தில் பெரும்பாலான கிரிப்டோக்கள் சரிவில் உள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications