உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சி அடைய வேண்டும் என்ற இலக்குடன் சீனா திட்டமிட்டு அதற்கான பாதையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்கா உடனான நட்புறவு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
இதற்கிடையில் சீனா, ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து கைப்பற்றியதை போல் அண்டை நாடான தைவான்-ஐ கைப்பற்றும் முயற்சியில் உள்ளது. தைவானுக்கு அமெரிக்கா துணை நிற்கும் நிலையில் சீனா போர் தொடுத்தால் மீண்டும் பெரிய பிரச்சனை உருவாகும்.
இதற்கு மத்தியில் தான் சீன அதிபரான ஜி ஜின்பிங் உடன் அமெரிக்க அதிபரான ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
ஜோ பைடன்
சமீபத்தில் அமெரிக்க அரசு ஜோ பைடன் தலைமையில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்கப் பல நாடுகள் உடன் இணைந்து முக்கியமான வர்த்தகக் கட்டமைப்பு, கொள்கைகளை உருவாக்கியது மறக்க முடியாது. அமெரிக்கா சீனாவுக்கு எதிராகத் தெற்காசிய நாட்டில் புதிய சக்தியை உருவாக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.
இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு
இதன் வாயிலாகத் தான் அமெரிக்கா மே மாதம் இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு (ஐபிஇஎஃப்) பொருளாதாரச் செழுமைக்காக வெளியிடப்பட்டது. இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க வலுவான பொருளாதாரக் கொள்கை அடிப்படையில் இந்தக் கூட்டமைப்பு 12 நாடுகள் உடன் இணைந்து உருவாக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தைவான் - சீனா
இந்த நிலையில் தைவான் - சீனா மத்தியில் உருவாகியுள்ள புதிய பிரச்சனைகள் மற்றும் பதற்றமான சூழ்நிலை குறித்து ஆய்வு செய்ய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சீனா - அமெரிக்கா நட்புறவு
சீனா - தைவான் பிரச்சனை, ரஷ்யாவுக்குச் சீனாவின் ஆதரவு ஆகியவற்றின் மூலம் சீனா - அமெரிக்கா மத்தியிலான நட்புறவில் பெரிய விரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் தான் மார்ச் மாதத்திற்குப் பின்பு இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
1972 க்குப் பின்
சீனாவிற்கான அமெரிக்கத் தூதர் நிக்கோலஸ் பர்ன்ஸ் ஜூன் மாதம், 1972 க்கு பின்பு சீனா - அமெரிக்காவின் இராஜதந்திர உறவுகள் மீண்டும் தொடங்கியதிலிருந்து சீனாவுடனான உறவு "மிகவும் மோசமான நிலைக்கு" தள்ளப்பட்டு உள்ளது என்று கூறினார்.
நான்சி பெலோசி
இந்தக் கருத்து வர முக்கியக் காரணம் அமெரிக்காவின் சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் நாட்டுச் செல்லுவதாக அறிவித்த போது, சீனா நாங்கள் அனைத்திற்கும் தயார் என்று அறிவித்துப் பெரும் பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது.
வரித் தளர்வு
இதற்கிடையில் தான் சீனா உடனான நட்புறவை மேம்படுத்த சீனா மீது விதிக்கப்பட்ட வரிகளைத் தளர்த்தவும், குறைக்கவும் திட்டமிட்டு உள்ளதாக ஜோ பைடன் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். இந்நிலையில் ஜி ஜின்பிங் உடனான ஜோ பைடன் பேச்சுவார்த்தைக்குப் பின்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications