ATM இயந்திரத்தை கண்டுபிடித்தது ஒரு இந்தியரா.. சுவாரஸ்ய கதை..!!

இந்தியா: இந்தியாவில் ஏடிஎம் இயந்திரங்களே இல்லாத கிராமங்கள் கூட கிடையாது என்ற அளவிற்கு பரவலாக நாம் காணும் இடங்களில் எல்லாம் பெரிய வங்கிகள் தொடங்கி சிறிய வங்கிகள் வரை ஏடிஎம் மையங்களை வைத்துள்ளன.

நமது வங்கி கணக்கிலிருந்து பணத்தை பெறுவது, வங்கி கணக்கில் பணத்தை செலுத்துவது, கணக்கில் உள்ள இருப்பை தெரிந்து கொள்வது என பல்வேறு வங்கி சேவைகளும் ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் எளிதாக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் ஒரு இந்தியர் என்பது தெரியுமா ?.

 ATM இயந்திரத்தை கண்டுபிடித்தது ஒரு இந்தியரா.. சுவாரஸ்ய கதை..!!

ஜான் ஷெப்பர்ட் பேரன் (John Shepperd Barron) இந்தியாவின் ஷில்லாங் மாநிலத்தை சேர்ந்த இவர்தான் உலகின் முதல் ஏடிஎம் இயந்திரத்தை கண்டுபிடித்தவர். 1925 ஆம் ஆண்டு ஷில்லாங் மாநிலத்தில் பிறந்தவர் ஜான் ஷெப்பர்ட் பேரன். பிறப்பால் இந்தியர் என்றாலும் இவரது பெற்றோர் ஸ்காட்லாந்தை சேர்ந்தவர்கள்.

1965ஆம் ஆண்டில் ஒரு நாள் சனிக்கிழமை வங்கியில் பணம் எடுப்பதற்காக சென்றிருந்தார். ஆனால் அவர் சில நிமிடங்கள் தாமதமாக சென்றதால் வங்கி மூடப்பட்டு பணம் எடுக்க முடியவில்லை.

என்னுடைய வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை என்னால் எடுக்க முடியாதா என்ற கோபம் ஏற்பட்டு அது தான் ஏடிஎம் இயந்திரத்தை உருவாக்கும் யோசனையை தந்துள்ளது. ஒரு இயந்திரத்தால் தானாகவே சாக்லேட் உள்ளிட்டவற்றை வழங்கும் போது பணம் வழங்க முடியாதா என்ற யோசனை அவருக்கு பிறந்தது.

இதனை படிப்படியாக மெருகேற்றி பணத்தை வழங்கும் தானியங்கி இயந்திரம் என்ற ஒரு கான்செப்ட் உடன் பார்க்கலேஸ் வங்கியின் தலைமை மேலாளரை சந்தித்தார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து அதாவது 1967 ஆம் ஆண்டு உலகின் முதல் ஏடிஎம் இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்தது.

வடக்கு லண்டனில் உள்ள பார்க்கலேஸ் வங்கியின் கிளையில் தான் முதல் ஏடிஎம் பொருத்தப்பட்டது. தற்போது நாம் பயன்படுத்துவதைப் போல பிளாஸ்டிக் அட்டைகள் அப்போது கிடையாது. காசோலைகளை பயன்படுத்தி மட்டுமே பணம் எடுக்க முடியும்.

ரேடியோ ஆக்டிவ் சப்ஸ்டேன்ஸ் கொண்ட காசோலைகளை செலுத்தி மக்கள் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டனர். அந்த காசோலையில் உள்ள ரேடியோ ஆக்டிவ் பொருளை பொருத்திப் பார்த்து ,பின்னர் பின் நம்பரை வழங்கினால் இயந்திரமானது பணத்தை கொடுக்கும்.

முதன் முதலில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுத்தவர் அன்றைய காலகட்டத்தில் பிரபலமான தொலைக்காட்சி தொடர் நடிகராக இருந்த ரெக் வார்னே ஆவார்.

ஷெப்பர்டு முதலில் தன்னுடைய ஏடிஎம் இயந்திரங்களில் வாடிக்கையாளர்கள் பணத்தை பெறுவதற்கு ஆறு இலக்கம் கொண்ட பின் நம்பர்களை தான் உருவாக்கியிருக்கிறார். ஆனால் இதனை நினைவில் வைப்பது சிரமமாக இருக்கும் என அவரது மனைவி கூறியதால் அதனை நான்கு இலக்க எண்களாக குறைத்தாராம்.

2010 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து மருத்துவமனையில் ஜான் ஷெப்பர்ட் பேரன் மறைந்தார்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+