ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய தரமான தயாரிப்புகள் மூலம் மக்களின் மனதை வென்ற ஒரு நிறுவனம் . ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் சந்தையில் விற்பனைக்கு வந்தாலே போட்டி போட்டுக் கொண்டு பலரும் வாங்குவார்கள் . குறிப்பாக iphone விற்பனைக்கு வரக்கூடிய முதல் நாள் அன்று ஆப்பிள் நிறுவன கடைகளில் வரிசையில் காத்திருந்து வாங்கக்கூடிய மக்களை நாம் காண முடிகிறது.
ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் என்றாலே அதன் தனித்துவத்திற்கும் தரத்திற்கும் பெயர் போனதாக இருக்கிறது. பிரீமியம் அனுபவம் கிடைக்கும் என்பது தான் இதன் பலமே. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்கும் அது நீடித்து நிலைத்திருப்பதற்கும் அதன் தலைமை செயல் அதிகாரிகளே காரணம். ஆப்பிள் நிறுவனம் என்ற உடனே நம் அனைவருக்கும் நினைவில் வரக்கூடியவர்கள் இரண்டு பேர் தான் முதல் நபர் ஸ்டீவ் ஜாப்ஸ், 2ஆவது நபர் தற்போதைய தலைமை செயல் அதிகாரியாக இருக்கக்கூடிய டிம் குக்.

உலகிலேயே சந்தை மூலதன அடிப்படையில் மிகப்பெரிய நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் இருந்து வருகிறது. இதன் தலைமை பொறுப்பு தற்போது யாருக்கு செல்ல போகிறது, டிம் குக்கிற்கு அடுத்ததாக ஆப்பிள் நிறுவனத்தை ஆளப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்லது. குறிப்பாக ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேகமாக இருந்து வரக்கூடிய காலத்தில் ஆப்பிள் நிறுவனம் தன்னை எப்படி தக்கவைத்துக் கொள்ள போகிறது இதனை யார் வழி நடத்தப் போகிறார்கள் என்ற கேள்வி உலகெங்கும் எழுந்திருக்கிறது.
டிம் குக் அடுத்த ஆண்டு 65 வயதை எட்டுகிறார். அவருக்கு மாற்றாக தலைமை செயல் அதிகாரி பொறுப்பை யார் ஏற்பார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அனைவருமே ஒரு மித்த குரலில் ஜான் டெர்னஸ் என்கின்றனர். ஆப்பிள் நிறுவனத்தில் நீண்டகால பணி அனுபவம் கொண்டவர். டிம் குக்கிறது மாற்று இவர் தான் என அனைவருமே கூறக்கூடிய வகையில் தன்னை நிரூபித்துள்ளார்.

ஜான் டெர்னஸ் ஹார்டுவேர் இன்ஜினியரிங் பிரிவில் சீனியர் வைஸ் பிரசிடெண்ட் என்ற பதவியில் இருக்கிறார். ஆப்பிள் நிறுவனத்தின் ப்ராடக்ட் டிசைன் பிரிவில் 2001 ஆம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தவர் .கிட்டத்தட்ட 25 ஆண்டு காலம் ஆப்பிள் நிறுவனத்திற்காக உழைத்திருக்கிறார் . ஆப்பிள் நிறுவனத்தின் ஒவ்வொரு கருவியிலும் இவருடைய தலையீடு இருக்கிறது.
அண்மை காலமாக வெளியான ஐபோன்கள் வடிவமைப்பில் இவருடைய பங்கு மிக முக்கியம் என சொல்லப்படுகிறது. இவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப் படிப்பை முடித்தார். கல்லூரி காலத்தில் மிகச்சிறந்த நீச்சல் வீரராகவும் இவர் செயல்பட்டாராம் . படிப்பை முடித்தவுடன் விர்ச்சுவல் ரிசர்ச் சிஸ்டம் என்ற நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியராக வேலைக்கு சேர்ந்தார்.
2001ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தில் ஊழியராக அடியெடுத்து வைத்தார். 2013 ஆம் ஆண்டு ஹார்டுவேர் இன்ஜினியரிங் பிரிவின் வைஸ் ப்ரெசிடெண்ட் பதவிக்கு உயர்ந்தார். ஐபாட், மேக் கணினிகள் ஆகியவற்றை வடிவமைக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு ஐபோன்களுக்கான ஹார்டுவேர் பொறுப்புகளும் இவரிடமே ஒப்படைக்கப்பட்டன. தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் எக்ஸிக்யூட்டி குழுவில் ஒரு உறுப்பினராக இருந்து வருகிறார் .
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications