இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஜான்சன் அண்ட் ஜான்சன் தனது உற்பத்தி ஆலைகளில் ஒன்றை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பொருட்களின் விற்பனை கடந்த சில மாதங்களாக குறைந்து வருவதால் நிறுவனத்தின் வருமானம் குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தெலுங்கானாவில் 55 ஏக்கர் பரப்பளவு உள்ள உற்பத்தி ஆலையை விற்பனை செய்ய ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ஜான்சன் அண்ட் ஜான்சன்
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கடந்த 2016ஆம் ஆண்டு தெலுங்கானாவில் 55 ஏக்கர் பரப்பளவு கொண்ட உற்பத்தி ஆலை ஒன்றை தொடங்கியது. இந்த ஆலையில் குழந்தை பராமரிப்பு பொருட்கள், சரும பாதுகாப்பு பொருட்கள், ஊட்டச்சத்து பானங்கள், அழகுசாதன பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்தன.
விற்பனை
இந்த நிலையில் தற்போது இந்த ஆலையை விற்பனை செய்ய ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி இந்த ஆலை உள்ள நிலத்தின் மதிப்பு 33 கோடி என்று கூறப்படுகிறது. இந்த ஆலையை ஹெட்டாரா என்ற மருந்து உற்பத்தி பொருள் நிறுவனம் விலைக்கு வாங்க உள்ளதாகவும் இந்த ஆலை சுமார் 310 கோடிக்கு விற்பனை ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
மருந்து தயாரிக்கும் நிறுவனம்
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தெலுங்கானா ஆலையை வாங்கும் 'ஹெட்டாரா' நிறுவனம் மருந்து தயாரிப்புக்கு ஏற்றவாறு இந்த ஆலையை மாற்ற உள்ளதாகவும் மேலும் 600 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது
விற்பனை சரிவு
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்பு பொருட்கள் கடந்த சில மாதங்களாக விற்பனையில் சரிவு ஏற்பட்டதாகவும் குறிப்பாக ஜான்சன் அண்ட் ஜான்சன் குழந்தை பவுடர் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு கேன்சர் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட தகவல் காரணமாக விற்பனை வீழ்ச்சி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மகாராஷ்டிரா அரசு பொது சுகாதாரத்தை கருத்தில் கொண்டு ஜான்சன் ஜான்சன் நிறுவனத்துக்கான தயாரிப்பு உரிமத்தை ரத்து செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications