ஜான்சன் & ஜான்சன் மீது அபராதம்.. $6.5 பில்லியன் செலுத்த உத்தரவு..!

நியூ யார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம், குழந்தைகளுக்கான தயாரிப்புகளை உலகளவில் விற்பனை செய்து வருகிறது. அவற்றில் குழந்தைகளுக்கான பவுடர், சோப்பு, ஆயில் போன்ற பொருட்கள் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் குழந்தைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்புகளால் புற்றுநோய் ஏற்படுவதாக உலகின் பல நாடுகளில் இந்நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடக்கப்பட்டது, குறிப்பாக அமெரிக்காவில் அதிகளவிலான வழக்குகள் பதிவானது.

கடந்த 25 ஆண்டுகளில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள், ஜான்சன் & ஜான்சன் தயாரிப்புகள் புற்றுநோய் ஏற்படுத்துவதாக கூறி பல்வேறு வழக்குகளைத் தொடுத்துள்ளனர். இதனை தீர்க்கும் பொருட்டு இந்நிறுவனம் 6.5 மில்லியன் டாலர்களைச் செலுத்தி, இந்த வழக்குகளை சரிசெய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கடந்த புதன் அன்று அறிவித்துள்ளது.

 ஜான்சன் & ஜான்சன் மீது அபராதம்.. $6.5 பில்லியன் செலுத்த உத்தரவு..!

பல ஆண்டுகளாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்புகளான பேபி பவுடர், புற்றுநோயை ஏற்படுத்துவதாக, அதன் பயன்பாட்டாளர்கள் வழக்கு தொடுத்து இருந்தனர். அதில் 99 சதவீத வழக்குகள், இந்நிறுவனத்தின் பவுடர் தயாரிப்புகள் கருப்பை புற்றுநோயை ஏற்படுத்துவதாகக் தொடுக்கப்பட்டுள்ளதாக என்பிசி நியூஸ் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனம் கருப்பை புற்றுநோய் தொடர்பான வழக்குகளை ஈடுகட்ட சுமார் $ 2.7 பில்லியன் செலுத்த இருந்தது. தற்போது இதனை அதிகரித்து $ 6.5 பில்லியன் டாலர்கள் செலுத்த உள்ளது. ஆனால் $11 டாலர்களுக்கான வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

ஒருவேளை இந்த ஒப்பந்தத்தில் உரிமைக்கு வருபவர்கள் சம்மதித்தால் கிட்டத்தட்ட 54,000 கருப்பை புற்றுநோய் பற்றிய வழக்குகள் முடிவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வழக்குகள் தனது கிளை நிறுவனமான LTL Management மூடுவதன் மூலம் முடிவுக்கு வர உள்ளது.

அதற்காக உரிமைகோருபவர்களிடம் ஒரு வாக்கெடுப்பை நடத்த வேண்டும். ஜே&ஜே, இந்த பிரச்னையைத் தீர்ப்பதற்கு குறைந்தபட்சம் 75% ஆதரவைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த உரிமைகோரல்களைச் செய்பவர்களுக்கு மூன்று மாத வாக்களிக்கும் காலத்தைத் தொடங்கும். அனால் இதற்கு முன் நடந்த 2 திவால் வழக்குகளில் உரிமைகோருபவர்கள் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்வுக்கான முயற்சிகளை தீர்க்கும் விதமாக இந்நிறுவனம் செயல்பட்டாலும், சில வழக்குகள் உரிமைக்கோருபவர்களுக்கு பெரிய தொகையை வழங்கியதன் மூலம் முடிவடைந்தன. உதாரணமாக, ஜே&ஜேயின் டால்க் தயாரிப்புகளில் உள்ள அஸ்பேஸ்ட்டோஸ் காரணமாக கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாகக் கூறிய 22 பெண்களுக்கு சுமார் $2 பில்லியன் வழங்கப்பட்டது.

மீதம் நிலுவையில் உள்ள வழக்குகள் மீசோதெலியோமா எனப்படும் அரிய வகை புற்றுநோயுடன் தொடர்புடையவை என்றும் அவை வேறு விதமாக தீர்க்கப்படும் என்றும் இந்நிறுவனம் கூறியுள்ளது. இன்றுவரை தாக்கல் செய்யப்பட்ட 95% மீசோதெலியோமா வழக்குகளை ஏற்கனவே தீர்த்துவிட்டதாகவும் கூறியுள்ளது.

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு எதிராக அதன் சப்ளையர்கள் ஐமெரிஸ் டால்க் அமெரிக்கா, சைப்ரஸ் மைன்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நிறுவங்களுக்கு வந்த உரிமைக் கோரல்களையும் தீர்த்துவைக்க ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+