ஜோஹார் சுல்தான் இப்ராஹிம் ஸ்கந்தர் மலேசியாவின் அரியணையை அந்நாட்டின் தனித்துவமான அரசு முடியாட்சி முறை மூலமாக அடைந்தார். 27 அக்டோபர் 2023 அன்று, அவர் மலேசியாவின் யாங் டி-பெர்டுவான் அகோங் ஆக ஐந்தாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மலேசியாவின் புதிய மன்னராக ஜோஹார் சுல்தான் இப்ராகிம் ஸ்கந்தர் 31 ஜனவரி 2024 அன்று, பதவியேற்றார். நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில் நடைபெற்ற விழாவில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். விழாவில் மற்ற அரச குடும்பத்தினர், பிரதமர் அன்வார் இப்ராகிம் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அவர் மலேசியா நாட்டின் மன்னர் மட்டுமல்ல. வணிக உலகில் மிகவும் வெற்றிகரமான செல்வாக்கு மிக்க ஆளுமையாக விளங்குகிறார்.
மன்னர் ஜோஹார் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தருக்கு 65 வயதாகிறது.
ஜோஹார் சுல்தான் இப்ராஹிமின் சொத்து மதிப்பு ரூ.47,327 கோடி என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
சுல்தான் இப்ராஹிமின் செல்வம், அதையும் தாண்டியதாக நம்பப்படுகிறது. மலேசியாவின் முக்கிய செல் சேவை வழங்குனர்களில் ஒன்றான யு மொபைலில் 24% பங்குகள் அவரது சொத்துக்களில் அடங்கும். மேலும் தனியார் மற்றும் பொது நிறுவனங்களில் கூடுதல் முதலீட்டு மதிப்பு $588 மில்லியன் ஆகும்.
ஜோஹார் சுல்தான் இப்ராஹிமின் வணிகப் பேரரசு பல்வேறு திசைகளில் விரிவடைகிறது. சிங்கப்பூரில் 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிலத்தையும் அவர் வைத்திருக்கிறார், அதில் தாவரவியல் பூங்காவை ஒட்டிய பரந்த பகுதியான டைர்சால் பார்க் அடங்கும்.
சுல்தானின் முதலீட்டு போர்ட்ஃபோலியோ $1.1 பில்லியனாக உள்ளது. பங்கு மற்றும் ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளிலிருந்து கணிசமான பணப்புழக்கத்துக்கு உதவியுள்ளது.
ரியல் எஸ்டேட் மற்றும் சுரங்கம், தொலைத்தொடர்பு மற்றும் பாமாயில் வரை, சுல்தான் இப்ராஹிமின் வணிகம் அனைத்தையும் உள்ளடக்கியது. அவரது வசிப்பிடமான இஸ்தானா புக்கிட் செரீன் மட்டுமே அவரது குடும்பத்தின் பெரும் செல்வத்துக்கு ஒரு சான்றாகும்.
இது தவிர, அவரிடம் 300 க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் உள்ளன. அவற்றில் ஒரு கார் அடால்ஃப் ஹிட்லரின் பரிசாக கொடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.
அவரது குடும்பம் தங்கம் மற்றும் நீலம் கொண்ட போயிங் 737 உட்பட தனியார் ஜெட் விமானங்களைக் கொண்டுள்ளது. இது அதிர்ச்சியாக இருக்கலாம் ஆனால் அவரது குடும்பம் ஒரு தனியார் ராணுவத்தையும் வைத்திருக்கிறது!
இது தவிர இந்தப் புதிய மன்னரிடம் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் பெரிய சேகரிப்பும் உள்ளது.
அவரது அரியணை, அரசியலை விட சம்பிரதாயமானது என்றாலும், இது மலேசியாவின் அரசியல் நிலப்பரப்பை மாற்றும் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் அவர் சிங்கப்பூரின் தலைமை மற்றும் வணிக முயற்சிகளுடன் ஒரு தனித்துவமான தொடர்பை உருவாக்கியுள்ளார்.
குறிப்பாக மலாய் சமூகத்தினருக்கான வணிக வாய்ப்புகளின் கேட் கீப்பராகவும் அவர் இருக்கிறார். சீன தொழில்முனைவோருடன் முக்கிய திட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications