சர்வதேச அளவில் இ-காமர்ஸ் வர்த்தகத்தில் இருக்கும் முன்னணி நிறுவனமான ஜூம், இந்தியாவில் களமிறங்குகிறது. லிஸ்பனை தலைமையகமாக கொண்டு செயல்படும் ஜூம் நிறுவனம் இந்தியாவின் - மும்பை, புதுடெல்லி, இந்தூர், ஜெய்பூர், சூரத், ரூர்கி மற்றும் லூதியானா என எட்டு நகரங்களில் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்காக பிளாட்ஃபார்ம் ஒன்றை உருவாக்கி இருக்கிறது.
ஜூம் தளத்தில் இதுவரை சுமார் 350-க்கும் அதிக வியாபாரிகள் இணைந்துள்ளனர். இதனால் இந்தியாவில் இருக்கும் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட், அமேசான்-க்கு பெரிய அளவிலான பாதிப்பு இருக்காது. இதுமட்டும் அல்லாமல் இந்திய சந்தையில் தற்போது புதிய வாடிக்கையாளர்களை பெறுவது என்பது சாதாரணமானது கிடையாது.
இந்த தளம் மூலம் இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் ஐரோப்பிய மற்றும் தனித்துவ மாகாணங்களுக்கான காமன்வெல்த் சந்தைகளில் எளிதில் வியாபாரம் செய்ய முடியும்.
ஜூம் தளம்
ஜூம் தளத்தில் இதுவரை சுமார் 350-க்கும் அதிக வியாபாரிகள் இணைந்துள்ள நிலையில் கிட்டத்தட்ட 50 சதவீத சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள், ஏற்றுமதியாளர்கள், D2C எனப்படும் நுகர்வோருக்கு நேரடி வியாபாரம் செய்வோர் இதுவரையில் வெளிநாட்டில் தங்களது தயாரிப்புகளை விற்பனை செய்யதது இல்லை.
சர்வதேச வர்த்தகம்
தற்போது ஜூம் தளத்தில் இணைந்தது மூலம் தங்களின் பொருட்களை சர்வதேச சந்தையில் சர்வதேச சந்தைகளை முதல் முறையாக அணுக முடியும் என ஜூம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.
முக்கிய பொருட்கள்
தற்போது ஜூம் நிறுவனம் அழகு, நகை, க்ரிஸ்டல் ஹீலிங், மருத்துவம் மற்றும் அழகு சாதனம், உடல்நல பொருட்கள், சரும பராமரிப்பு, தலைமுடி பராமரிப்பு, பெண்களுக்கான அழகுசாதன பிரிவில் பொருட்களை விற்பனை செய்யும் வாய்ப்புகளையும், தளத்தையும் வழங்கி வருகிறது.
இந்தியா
இந்தியாவில், தற்போது கற்பனை கதாபாத்திர ஆடை அணிகலன்கள், ஹெல்மட், ஆர்மர்,ஷீல்டுகள், தேனீ வளர்ப்பவர்களுக்கான தயாரிப்புகள்; குதிரைகளுக்கான சேணம்; மற்றும் ரத்தின கற்கள், கார்பெட் மற்றும் பாரம்பரிய துணிகள், என பல்வேறு பிரிவுகளில் பொருட்களை வழங்குகிறது.
மேக்சிம் பெலோவ்
2022 வாக்கில் ஜூம் உடன் இணைந்த வியாபாரிகள் தளத்தில் வெற்றி பெற்றதோடு, முன்னணி இடத்திலும் உள்ளனர். அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து ஒவ்வொரு மாதமும் 50 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து வருகிறோம் என ஜூம் நிறுவனத்தின் ஆசியா-பசிபிக் பகுதிக்கான வியாபார வளர்ச்சி பிரிவு தலைவர் மேக்சிம் பெலோவ் தெரிவித்தார்.
வளர்ச்சி
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முதன் முதல் விளம்பரம் ஆறு மடங்கு வளர்ச்சியை பெற்றது. இதன் காரணமாக விற்பனையாளர்கள் அதிகபட்சமாக பத்து மடங்கு வரை வளர்ச்சி பெற்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
2016 முதல் ஜூம் நிறுவனம்
2016 ஆம் ஆண்டு லத்வியாவில் துவங்கப்பட்ட ஜூம் நிறுவனம், இந்த ஆண்டு இறுதிக்கள் இந்தியா தனது முதல் இரு சர்வதேச சந்தைகளில் ஒன்றாக மாறும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது. 2023 வாக்கில் சர்வதேச அளவில் B2C இ-காமர்ஸ் சந்தையின் மதிப்பு 5.57 ட்ரில்லியன் டாலர்களாக இருக்கும் என்றும், இதன் வளர்ச்சி CAGR அளவில் 25.8 சதவீதமாக இருக்கும் என கிராண்ட் வியூ ஆய்வில் கணிக்கப்பட்டு இருக்கிறது.
ஆசியா பசிபிக் பகுதி
சர்வதேச அளவில் ஆடை மற்றும் அணிகலன்கள் தொடர்ந்து அதிகம் விற்பனையாகும் பிரிவுகளாக உள்ளன. ஆசியா பசிபிக் பகுதியிலும் இதன் வளர்ச்சி கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள பெருமளவு நுகர்வோர் எண்ணிக்கை காரணமாக இந்த வளர்ச்சி இருக்கும் என ஆய்வில் குறிப்படிப்பட்டு இருக்கிறது.
ஐரோப்பியா
ஜூம் ஆன்லைன் தளம் மட்டுமின்றி, இதே நிறுவனம் ஆன்ஃபி (Onfy) பெயரில் மருந்து நிறுவனத்தை ஜெர்மனியிலும், ஐரோப்பாவில் ஜூம்பே எனும் ஃபின்டெக் சேவை, ஜூம் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் ஜூம்-ப்ரோ பெயரில் மொத்த வியாபார பிளாட்ஃபார்ம் உள்ளிட்ட நிறுவனங்களை கொண்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜூம் நிறுவனம் உலகளவில் 400 மில்லியன் பதிவு செய்த பயனர்களை எட்டியது.


Click it and Unblock the Notifications