உலக அரங்குகளில் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதில் கோடீஸ்வரர்களின் பங்கு அதிகம். அந்தவகையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே, ஆனால் நம் அண்டை நாடான நேபாளத்தின் மிகப் பெரிய பணக்காரர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்தான் பினோத் சவுத்ரி. இவரது தாத்தா இந்தியாவுக்கு வந்து, ஜவுளித் தொழிலைத் தொடங்கி, அதில் நல்ல வெற்றியைப் பெற்றார்.
நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் பிறந்த பினோத் சவுத்ரி, இந்தியாவில் ஃசார்டட் அக்கவுன்டன்ட் படிக்க விரும்பினார். இருப்பினும், தாத்தாவின் மறைவு, தந்தையின் உடல்நலக்குறைவு காரணமாக குடும்பப் பொறுப்புகளை ஏற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதன்பிறகு தனது குடும்பத் ஜவுளித் தொழிலின் உற்பத்தியை விரிவாக்கம் செய்து உலகளவில் அதை பெரிய சாம்ராஜ்யமாக உருவாக்கினார்.

பினோத் சவுத்ரி தனது ஜவுளி தொழிலை மிகச்சிறிய அளவில் தொடங்கி தனது தயாரிப்புகள் மூலம் நேபாளத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் ஒவ்வொரு தெருவிலும் விரிவுபடுத்தினார். சவுத்ரியின் நிகர மதிப்பு முகேஷ் அம்பானி, கௌதம் அதானி மற்றும் ரத்தன் டாடா ஆகியோரை விட மிகக் குறைவு என்றாலும் அவரது சாதனைகள் உலகளவில் பெரிதும் பாரட்டப்பட்டது.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மிகப்பெரிய ரசிகனான இவர், இந்திய தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ஜே.ஆர்.டி.டாடாவின் தொழில் வெற்றிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். இதன்மூலம், குடும்ப தொழிலை தாண்டி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்க புதிய பிஸ்னஸ் பயணத்தை நேபாள தலைநகரான காத்மாண்டுவில் தொடங்கினார்.
பினோத் சவுத்ரி ஒருமுறை தாய்லாந்து சென்றார், அப்போது அங்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் பற்றியும், அது மக்களிடையே கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை பற்றியும் தெரிந்துகொண்டார் வியந்தார். இதையடுத்து, நேபாளத்தில் இந்தத் தொழிலைத் தொடங்க முடிவு செய்தார்.
நேபாளத்திற்குத் திரும்பிய அவர், தனது சொந்த பிராண்டான வை வை நூடுல்ஸை அறிமுகப்படுத்தினார். இந்த இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் நேபாள மக்களால் உடனடியாக விரும்பப்பட்டு, ஒவ்வொரு வீட்டிலும் விருப்பமான நூடுல்ஸாக மாறியது. இது நோப்பாளம் தாண்டி இந்தியா மற்றும் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் மிகவும் பிரபலமான நூடுல்ஸாக விளங்கிவருகிறது. பினோத் சவுத்ரியின் சொத்து மதிப்பு 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.15,000 கோடி என கூறப்படுகிறது.
நூடுல்ஸ் தயாரிப்பு மட்டுமின்றி, நேஷனல் பேனாசோனிக் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றிய சவுத்ரி, நேபாளத்தில் சுசூகி கார்களை அறிமுகப்படுத்திய பிறகு, ஆட்டோமொபைல் தொழிலிலும் மிகப்பெரிய வளர்ச்சியடைந்து அந்நாட்டின் மாபெரும் தொழிலதிபராக திகழ்ந்து வருகிறார்.
மேலும், பினோத் சவுத்ரி பேங்கிங், ஹாஸ்பிடாலிட்டி மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளிலும் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். 1995 ஆம் ஆண்டில், பினோத் சவுத்ரி, துபாய் அரசாங்கத்தின் நபில் வங்கி பங்குகளை வாங்கினார். இது அவரது வணிக சாம்ராஜ்யத்தை மேலும் வலுப்படுத்தியது. வணிகத்தைத் தவிர, அவர் சமூகப் பணி மற்றும் அரசியலிலும் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
2015ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தின் போது, பள்ளிகள் மற்றும் வீடுகளை கட்டவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கவும் சுமார் ரூ.20 கோடியை நன்கொடையாக வழங்கி அந்நாட்டு மக்கள் மத்தியில் நற்பெயரை பெற்றார். இதுமட்டுமல்லாமல், பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5,00,000 வை வை நூடுல்ஸ் பாக்கெட்டுகள், ஏராளமான ஜூஸ் அட்டைப் பெட்டிகள், உணவு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை அவர் நன்கொடையாக வழங்கினார்.
சவுத்ரியின் சொத்து மதிப்பு, உலகின் டாப் தொழிலதிபர்களின் செல்வத்திற்கு இணையாக இல்லாவிட்டாலும், அவரது பயணம் உண்மையிலேயே வளர்ந்துவரும் தொழிலதிபர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. விடாமுயற்சி, மற்றும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை ஆகியவை, ஒருவரது வாழ்வில் வெற்றி அடைய செய்ய முடியும் என்பதை இவரது சாதனைகள் நிரூபிக்கின்றன.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications