உலகின் மிகப்பெரிய நிதியியல் அமைப்பான ஜேபி மோர்கன் சேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜேமி டைமன், அமெரிக்க-சீன வர்த்தக போரில் சீனா எளிதில் பணியாது என்று அமெரிக்க அரசையும், அமெரிக்க நிர்வாகத்தையும் எச்சரித்துள்ளார்.
டிரம்ப் தலைமையிலான அரசு வரி விதிப்பு மூலம் உலக நாடுகளை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. இது சர்வதேச வர்த்தகத்தை பெரிதும் பாதிக்கப்படும் வேளையில் அமெரிக்காவும் - சீனாவுக்கும் மத்தியிலான வர்த்தக பேச்சுவார்த்தை மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.

இந்த நிலையில் மே 30ஆம் தேதி கலிபோர்னியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜேபி மோர்கன் சேஸ் சிஇஓ ஜேமி டைமன் முக்கியமான விஷயத்தை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட ஜேமி டைமன், "அமெரிக்காவின் வரி விதிப்புக்கும், வர்த்தக கட்டுப்பாடுகளுக்கும் சீனா பயப்படவில்லை," என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
டிரம்ப் தனது வரி விதிப்பு மூலம் அமெரிக்காவின் எதிர்காலம் மாறப்போகிறது என பேசி வரும் வேளையில் அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா பயப்படவில்லை என ஜேமி டைமன் கூறுவது சர்வதேச முதலீட்டு சந்தைக்கு அதிர்ச்சியாக உள்ளது.
கலிபோர்னியா கூட்டத்தில் பேசிய ஜேமி டைமன் "சீனர்கள் ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளும்போது, அந்த பிரச்சனையை தீர்க்க ஒரு லட்சம் பொறியாளர்களை பணியில் அமர்த்துகிறார்கள். அமெரிக்கா உருவாக்கியுள்ள இத்தகைய நெருக்கடியை சமாளிக்க அவர்கள் பல ஆண்டுகளாக தயாராகி வருகின்றனர்," என்று அவர் விளக்கினார். சீனாவின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மிகவும் வலிமையாக உள்ளது, இது அமெரிக்காவுக்கு ஒரு கடுமையான சவாலாக இருக்கும் என எச்சரித்துள்ளார்.
அமெரிக்க-சீன வர்த்தக பதற்றம்: டிரம்ப் அரசு சீனாவுக்கு எதிராக அதிகப்படியான இறக்குமதி வரிகளை விதித்து அழுத்தம் கொடுத்து வருகிறது. மே 2025-ல் இரு நாடுகளும் வரிகளை சற்று குறைத்தாலும், இரு நாடுகளுக்கிடையேயான உறவு மீண்டும் பதற்றமாக உள்ளது. இதற்கிடையில் ஜேமி டைமனின் பேச்சு, சீனாவின் உறுதியான அணுகுமுறை, அமெரிக்காவின் பொருளாதார அழுத்தங்களை மீறி செயல்படும் திறனைக் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
அமெரிக்க ராணுவத்தின் பலவீனம்: அமெரிக்கா சீனா மத்தியிலான வர்த்தகத்தைத் தாண்டி, ஜேமி டைமன் அமெரிக்காவின் ராணுவ உள்ள குறைபாடுகளையும் சுட்டிக்காட்டினார். "தென் சீனக் கடலில் தைவான் மூலம் இரு நாடுகளுக்கும் மத்தியில் போர் ஏற்பட்டால், அமெரிக்காவிடம் ஏழு நாட்களுக்கு மட்டுமே ஏவுகணைகள் உள்ளன" என்று ஜேமி டைமன் கவலை தெரிவித்தார்.
இதை உடனடியாக சரிசெய்ய வேண்டியதன் அவசியத்தையும் ஜேமி டைமன் இக்கூட்டத்தில் பேசினார்.
கடைசியாக பேசிய ஜேமி டைமன், அமெரிக்க அரசு சீனாவின் பொருளாதார மற்றும் மூலோபாய வலிமையை உண்மையாகவும், சரியாகவும் மதிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications