அமெரிக்கா: ஜேபி மார்கன் சேஸ் (JPMorgan Chase) சுமார் 500 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்ட உலகின் மிகப்பெரிய வங்கி. ஆனால் முதலில் ஜேபி மார்கன் குடிநீர் விநியோகம் செய்யும் நிறுவனமாக தான் தொடங்கப்பட்டது.
1799 ஆம் ஆண்டு நியூயார்க் மாநில சட்டமன்றம் குடிநீர் விநியோகத்திற்கான ஒப்பந்தத்தை தி மேன்ஹேட்டன் நிறுவனத்திடம் வழங்கியது. அந்த நிறுவனம் தான் தற்போது உலகின் மிகப்பெரிய வங்கியாக மாறி நிற்கிறது.

1790களில் நியூயார்க் நகரம் விரிவடைந்து வந்தது. அப்போது குடிநீர் விநியோகம் செய்ய நியூயார்க் சட்டமன்றம் தி மேன்ஹேட்டன் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டது. ஆரோம் பர் மற்றும் அலெக்சாண்டர் ஆகிய இரண்டு பேர் தான் தி மேன்ஹேட்டன் நிறுவனத்தை நிறுவியவர்கள். இவர்களில் ஆரோம் பர் திறமைசாலி. குடிநீர் விநியோகத்தில் கிடைத்த லாபத்தையும் மூலதனத்தையும் கொண்டு படிப்படியாக வங்கி செயல்பாடுகளுக்கு பயன்படுத்த அனுமதி பெற்றார்.
இப்படி தான் தி மேன்ஹேட்டன் வங்கி தொடங்கப்பட்டது. அப்போது நியூயார்க் நகரில் தொடங்கப்பட்ட இரண்டாவது வங்கி இது. பின்னர் 1996 ஆம் ஆண்டு பல்வேறு வங்கிகளும் இணைந்து ஜேபி மார்கன் சேஸ் என்ற வங்கியாக மாறின. தி மேன்ஹேட்டன் வங்கி, ஜே பி மார்கன் & நிறுவனம், கெமிக்கல் வங்கி, பேங்க் ஒன் ஆகியவை இணைந்து ஜே பி மார்கன் சேஸ் என்ற ஒரு வங்கியை உருவாக்கின.
குடிநீர் வினியோகம் செய்யும் நிறுவனமாக இருந்து மேன்ஹேட்டனை வங்கி ஆக மாற்றியது மற்றும் பல வங்கிகளை ஒன்றாக இணைத்த பெருமை ஆரோன் பர்ரையே சாரும். அன்று முதல் ஜேபி மார்கன் சேஸ் வங்கி தனது சேவைகளை விரிவிபடுத்த தொடங்கியது. தற்போது, அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியாகவும், சந்தை மூலதன அடிப்படையில் உலகின் மிகப்பெரிய வங்கியாகவும் மாறியுள்ளது.
உலக அளவில் கூறப்படும் பிக் 4 எனப்படும் முக்கியமான நான்கு வங்கிகளில் ஜேபி மார்கன் வங்கியும் ஒன்று. தற்போது சுமார் 3 டிரில்லியன் டாலர்கள் அளவிலான சொத்துக்களை இந்த வங்கி நிர்வாகித்து வருகிறது . சொத்துக்கள் அடிப்படையில் பார்க்கும்போது ஜே பி மார்கன் சேஸ் உலக அளவில் ஐந்தாவது பெரிய வங்கி ஆகும்.
கடந்த 2023இல் இந்த வங்கியின் வருவாய் 158 பில்லியன் டாலர்கள். உலகெங்கிலும் 3 லட்சம் ஊழியர்கள் இதில் பணிபுரிகின்றனர். சொத்து மேலாண்மை, வங்கி, கார்ப்பரேட் மற்றும் முதலீட்டு வங்கி சேவைகள் என நிதி சார்ந்த அனைத்து சேவைகளையும் வழங்கி வருகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications