இந்திய ஐடி துறை பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில் இந்த மார்ச் காலாண்டு முடிவுகள் பெரும் தாக்கத்தையும் பாதிப்பையும் முதலீட்டாளர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. மார்ச் காலாண்டு முடிவுகளில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் முதல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரையில் அதிகம் நம்பியிருக்கும் டிசிஎஸ், இன்போசிஸ் பல விஷயத்தை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை சீர்குலைத்துள்ளது.
ஆனால் மறுப்புறம் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், மாஸ்டெக், சைனெட் ஆகியவை சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்டு அதிகப்படியான முதலீட்டாளர்களை வியக்க வைத்துள்ளது. வியாழக்கிழமை காலாண்டு முடிவுகளை வெளியிட்ட ஹெச்சிஎல் பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் பெரிய உயர்வை சந்திக்காவிட்டாலும் 0.20 சதவீத உயர்வுடன் முடிவடைந்தது.

சர்வதேச சந்தையில் உருவாகியுள்ள வர்த்தக பாதிப்பு, பொருளாதார வளர்ச்சியின் மந்த நிலை காரணமாக உலகின் முன்னணி ப்ரோகிங் நிறுவனமான ஜேபி மோர்கன் இந்திய ஐடி துறையின் முன்னணி நிறுவனங்கள் BFSI, டெலிகாம் துறை அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது மட்டும் அல்லாமல் அதிகப்படியான வர்த்தகத்தை இதில் வைத்திருக்கும் காரணத்தால் ஐடி நிறுவனங்கள் ஆபத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஜேபி மோர்கன் டெக் மஹிந்திரா மற்றும் Mphasis ஆகிய இரு நிறுவனத்தின் வருவாய், லாப அளவீடுகளை குறைத்து கணித்துள்ளது. இதோடு டெக் மஹிந்திரா மற்றும் Mphasis ஆகிய இரு நிறுவனங்களின் ரேட்டிங்-ஐ neutral-ல் இருந்து underweight ஆக குறைத்துள்ளது. மேலும் டெக் மஹிந்திரா-வின் டார்கெட் விலையை 900 ரூபாயாகவும், Mphasis நிறுவனத்தின் டார்கெட் விலையை 1550 ஆக குறைந்துள்ளது.
வல்லரசு நாடுகளில் உருவாகியுள்ள பொருளாதார மந்த நிலை இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ, டெக் மஹிந்திரா-வின் வர்த்தகம் கடுமையாக பாதித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்தியா ஐடி நிறுவனங்கள் வெளிநாட்டில் வைத்திருக்கும் பங்கீடு.

இன்போசிஸ் சுமார் 97 சதவீத வருமானத்தை வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகின் பிற நாடுகளில் இருந்து பெற்று வருகிறது. இதேபோல் டிசிஎஸ் தனது மொத்த வருமானத்தில் சுமார் 95 சதவீதத்தை வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகின் பிற நாடுகளில் இருந்து பெற்று வருகிறது. இதன் மூலம் டிசிஎஸ், இன்போசிஸ் ஆகிய இரு முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் இந்தியாவில் 5 சதவீதத்திற்கும் குறைவான வருமானத்தை மட்டுமே பெற்று வருகிறது.
ஐடி சேவை துறையில் கடந்த ஒரு வருடத்தில் புதிய ஆர்டர்கள் எண்ணிக்கையும், அளவும் குறைந்து வரும் காரணத்தால் ஊழியர்களுக்கான தேவை குறைந்துள்ளது. இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தில் மார்ச் காலாண்டில் பென்ச்-ல் இருக்கும் ஊழியர்கள் அளவு மொத்த ஊழியர்களிள்ல 20 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேபோன்ற நிலை தான் டிசிஎஸ் நிறுவனத்திலும் உள்ளது.
இதன் மூலம் அமெரிக்க, ஐரோப்பாவில் பொருளாதார மந்தநிலை அதாவது ரெசிஷன் உருவானால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு கிடைக்கும் புதிய வர்த்தகம், வருமானம் ஆகியவை பாதிக்கும் என்பது தெளிவாக தெரிகிறது. இதன் எதிரொலி தான் ஜேபி மோகன் அறிவித்துள்ள ரேட்டிங் குறைப்பு.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications