உலகம் முழுவதும் நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வரும் வேளையில் டெக் நிறுவனங்களைத் தாண்டி தற்போது ரெசிஷன் அச்சம் பிற துறைகளையும் கடுமையாகப் பாதித்து வருகிறது.
டெக் மற்றும் டிஜிட்டல் சேவை துறையில் இருக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து பணிநீக்கம் செய்து வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு விமானத் தயாரிப்பில் இருக்கும் போயிங் சுமார் 2000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது.
இதைத் தொடர்ந்து தற்போது நிதி மற்றும் முதலீட்டு சேவைகளை அளித்து வரும் பன்னாட்டு நிறுவனமான ஜேபி மோர்கன் பல நூறு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முக்கியமான விஷயம்
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஜேபி மோர்கன் தனது வர்த்தகம் மற்றும் சேவையை மேம்படுத்துவதற்குப் புதிய வங்கித்துறை அதிகாரிகளைப் பணியில் அமர்த்துவதாக அறிவித்த சில மணிநேரத்தில் பணிநீக்கம் செய்யும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜேபி மோர்கன் சேஸ்
உலகிலேயே அதிகச் சந்தை மதிப்பை கொண்ட வங்கியாக விளங்கும் இந்த ஜேபி மோர்கன் சேஸ் & கோ, அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வருகிறது.
பணிநீக்கம்
இந்த நிலையில் ஜேபி மோர்கன் தனது வர்த்தகத்தையும், சேவை தரத்தையும் மேம்படுத்தப் புதிதாக வங்கி அதிகாரிகளைப் பணியில் சேர்க்க உள்ளதாக அறிவித்த அடுத்த சில மணிநேரத்தில் பல நூறு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளதாக ரெயூட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
செய்தி தொடர்பாளர் விளக்கம்
ஜேபி மோர்கன் சேஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் நாங்கள் தொடர்ந்து எங்களுடைய வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அடிப்படையில் ஊழியர்கள் எண்ணிக்கையை நிர்ணயம் செய்யப்படும்.
ஊழியர்கள் தேவை
இதன் அடிப்படையில் அதிக ஊழியர்கள் தேவைப்படும் இடத்தில் புதிய ஊழியர்களை நியமித்தும், ஊழியர்கள் தேவை இல்லாத இடத்தில் ஆட்களைக் குறைப்பும் செய்யப்படும் எனத் தெரிவித்தார். புதன்கிழமை காலை வர்த்தகத்தில் ஜேபி மோர்கன் சிறு நிறுவனங்களுக்கு வர்த்தகம் செய்வதற்காக 500 ஊழியர்களைப் பணியில் சேர்க்க உள்ளதாக அறிவித்தது.
சிறு நிறுவனங்கள்
சிறு நிறுவனங்களுக்கான சேவை பிரிவில் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியைக் கண்டுள்ள காரணத்தால் இப்பிரிவு ஊழியர்கள் எண்ணிக்கையை 20 சதவீதம் அதிகரித்து 2300 ஆக உயர்த்த உள்ளது.
சிஇஓ ஜேமி டிமன்
இதேபோல் ஜேபி மோர்கன் நிறுவனத்தின் சிஇஓ ஜேமி டிமன் கூறுகையில் நிறுவனத்தின் வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து ஊழியர்களைச் சேர்ப்பது மட்டும் அல்லாமல் புதிய அலுவலகங்களையும் திறந்து வருகிறோம் என ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
பணிநீக்கம்
ஆனால் இதே ஜேபி மோர்கன் தற்போது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதை வழக்கமான பணிகளில் ஒன்று என இந்நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

உழைப்பை யாரும் மதிக்கவில்லை!கார்ப்பரேட் வெற்றிக்கு அதிர்ஷ்டம் முக்கியமா- மைக்ரோசாப்ட் ஊழியர் வேதனை?

பெங்களூரு IT ஊழியர்களுக்கு ஷாக்!80% பேர் வேலையை இழக்கப்போகிறார்களா? AI-யால் இன்னும் என்ன ஆகுமோ?

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications