உலகின் முன்னணி வங்கியான ஜேபிமார்கன் சேஸ் (JPMorgan Chase & Co.) இந்தியாவில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய கிளையை தொடங்க உள்ளது. இந்தியாவின் வேகமெடுக்கும் பொருளாதாரத்தின் காரணமாக, அமெரிக்கா வங்கி தனது செயல்பாடுகளை இந்தியாவில் விரிவுபடுத்தும் விதமாமாக புதிய கிளை துவங்க உள்ளது.
ரிசர்வ் வங்கி புதிய அலுவலகம் அமைப்பதற்காக முதல் கட்ட அனுமதியை அளித்த நிலையில், ஜேபி மார்கன் புனேயில் நான்காவது கிளையை அமைக்க உள்ளது. இது மும்பையை சுற்றியுள்ள கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான சேவைகளை வழங்கும் இடமாக மாறும்.

புதிய கிளை கார்ப்பரேட் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டது. இதில் பரிவர்த்தனை வங்கி சேவைகள் (transaction banking), குறுகிய கால கடன் (term lending) உள்ளிட்ட முழுமையான சேவைகள் அளிக்கப்படும். இந்தியாவின் வேகமான வளர்ச்சி, வலுவான கடன் தேவை, கார்ப்பரேட் செயல்பாடுகள் அதிகரிப்பு காரணமாக வெளிநாட்டு வங்கிகள் இந்தியாவில் விரிவாக்கம் செய்து வருகிறது. ஜேபிமார்கன் இந்தியாவில் சொத்து மேலாண்மை, முதலீட்டு வங்கி, பல்வேறு நிதி சேவைகளை வழங்கி வருகிறது.
சமீபத்தில் ஜப்பான் வங்கிகள் இந்திய வங்கி துறையில் அதிகப்படியான முதலீட்டை செய்ய துவங்கிய நிலையில், தற்போது அமெரிக்க முதலீட்டு வங்கியான ஜேபி மார்கன் விரிவாக்கத்தில் இறங்கியுள்ளது.
ஜேபி மார்க்ன் நிறுவனத்திற்கு 4வது அலுவலகம் அமைக்க RBI இன் முதல் கட்ட அனுமதி கிடைத்துள்ளதை இவ்வங்கியின் செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் RBI இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. 2016இல் RBI மூன்று இடங்களில் கிளைகள் தொடங்க அனுமதித்தது. அதன் பிறகு 2026ல் புதிய கிளையை திறக்க உள்ளது ஜேபிமார்கன்.


Click it and Unblock the Notifications