இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் உலக நாடுகளின் மந்தமான பொருளாதாரம் காரணமாக புதிய வர்த்தகத்தை பெறுவதில் மோசமான சூழ்நிலையை சந்தித்து வரும் நிலையில், ஜேபி மோர்கன் முதலீட்டாளர்களுக்கு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
சர்வதேச நிதியியல் சேவை நிறுவனமான ஜேபி மோர்கன், ஜூன் மாதம் இந்திய ஐடி சேவை நிறுவனங்களுக்கான டிமாண்ட் குறைந்து காணப்படும் என்பதால் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் மீது வைத்த negative view-ஐ மாற்றாமல் தொடர்ந்து அதே நிலையை மெயின்டெயின் செய்ய முடிவு செய்துள்ளது.

இதுமட்டும் அல்லாமல் இந்திய ஐடி நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் தற்காலிகமாக நிறுத்தியுள்ள ப்ராஜெக்ட்-களை திரும்ப துவங்கவும், ஐடி சேவை துறைக்கான டிமாண்ட் அதிகரிக்கவும் அடுத்த 6 முதல் 9 மாதத்தில் வாய்ப்புகள் மிகவும் குறைவு என தெரிவித்துள்ளது. இதன் மூலம் நடப்பு ஆண்டின் 2வது பாதியில் இந்திய ஐடி சேவை துறையின் வளர்ச்சி வாய்ப்புகள் குறைவு எனவும் தெரிவித்துள்ளது.
ஜேபி மோர்கன் நிறுவனத்தின் குறுகிய கால கண்காணிப்பு இன்டிகேட்டரான catalyst watch பட்டியலில், நெகட்டிவ் பிரிவில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்போசிஸ், Mphasis ஆகிய 3 நிறுவனங்களை வைத்துள்ளது. இதன் மூலம் 3 நிறுவனங்களும் 2024 ஆம் நிதியாண்டில் முதல் காலாண்டில் வருவாய் மற்றும் மார்ஜின் அளவில் முதலீட்டாளர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை தரும் என அறியப்படுகிறது.
இதன் மூலம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் டிசிஎஸ் 2-3 சதவீத வருவாய் இழப்பும், இன்போசிஸ் மற்றும் Mphasis 3-4 சதவீத வருவாய் இழப்பும் எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜேபி மோர்கன் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மாற்றம் இந்நிறுவனத்திற்கு தடுமாற்றத்தை கொடுக்கும் என தெரிவித்துள்ளது. இதன் மூலம் மார்ச் 2024-க்குள் 2700 ரூபாயா டார்கெட் விலையாக நிர்ணயம் செய்துள்ளது.

HCL நிறுவனத்தை பொறுத்த வரையில் மூலதன ஒதுக்கீடு மற்றும் நிர்வாக மாற்றங்களும் கோர் ஐடி சேவைக்கு பல வருட உச்சத்தை தொட்டு உள்ளது. இதன் மூலம் டிசம்பர் 2023ல் ஹெச்சிஎல் டெக் பங்குகள் டார்கெட் விலை 880 ரூபாயாக இருந்த நிலையில், மார்ச் 20240க்கு 900 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
ஜேபி மோர்கன் அறிக்கை பொறுத்த வரையில் இந்திய ஐடி சேவை நிறுவனங்களின் வர்த்தக நிலை அடுத்த 6 முதல் 9 மாதங்களுக்கு மந்தமாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் செலவுகள் குறைப்பு, மறுசீரமைப்பு நடவடிக்கைகள் கட்டாயம் எடுக்கும்.


Click it and Unblock the Notifications