சென்னை: தமிழ்நாட்டில் தனது உற்பத்தித் திறனை விரிவுபடுத்தி, ஏற்றுமதியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது பீனிக்ஸ் கோத்தாரி புட்வேர் லிமிடெட் மற்றும் தைவான் நாட்டின் ஷூடவுன் குரூப் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான JR One Footwear Pvt Ltd நிறுவனம் மாநிலத்தில் இரண்டு புதிய உற்பத்தி தொழிற்சாலை மற்றும் தோல் பாகங்களைத் தயாரிக்கும் கிளஸ்டர்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது என்று நிறுவனத்தின் உயர் அதிகாரி செவ்வாயன்று தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 'Crocs' காலணிகளைத் தயாரிப்பதற்காக JR One Footwear நிறுவனம் ஒரு தொழிற்சாலையை அமைப்பதற்காக ஏற்கனவே சுமார் ரூ.5,000 கோடி முதலீடு செய்துள்ளது. இந்த கராக்ஸ் தொழிற்சாலை சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது, இதில் சுமார் 1,700 பேர் நேரடி மற்றும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் பீனிக்ஸ் கோத்தாரி புட்வேர் தலைவர் ஜே. ரபிக் அகமது பேசுகையில் "நாங்கள் இரண்டு புதிய மாவட்டங்களில் உற்பத்தி தளத்தை அமைப்பதற்காக எங்களின் உற்பத்தியை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளோம். இந்த 2 புதிய தொழிற்சாலையில் 2 தனித்தனி சர்வதேச காலணி பிராண்டுகளை கொண்டு வருகிறோம். விரைவில் இரண்டு மாவட்டங்களின் பெயரை அறிவிப்போம்" என்று கூறினார்.
உலகளவில், Shoetown Group என்பது காலணிகளின் முன்னணி உற்பத்தியாளராகும், இந்தியாவில் காலணிகளைத் தயாரிப்பதற்காக Shoetown Group, கோத்தாரி குழுமம் உடன் மட்டுமே கூட்டணி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு புதிய முதலீடுகளையும், புதிய தொழிற்சாலைகளைச் சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் மட்டுமே முடக்கி வைக்கக் கூடாது, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் முதலீடுகளும், தொழிற்துறைகள் உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தது தொடர்ந்து தற்போது மாநிலத்தின் பல மாவட்டத்தில் புது புது வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதன் வாயிலாகத் தான் தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள பெரம்பலூர் மாவட்டத்திற்கு இரண்டாவது சிப்காட் தொழிற்பூங்கா அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே உள்ள திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இறையூர் தொழிற்பூங்காவுக்கு இணையாக, பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற்பூங்கா அமைக்கப்படவுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்தது.
சீனா+1 கொள்கை வாயிலாக Nike, Adidas, Puma பிராண்டுகளின் காலணிகளைத் தயாரிக்கும் தைவான் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் முன்னணி பிராண்டுகளின் காலணி தயாரிப்பு பல்வகைப்படுத்தப்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல் சர்வதேச அளவில் சப்ளை செய்ய உள்ளது.
தமிழ்நாட்டில் தோல் அல்லாத காலணி தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இதே வேளையில், தமிழ்நாட்டின் உற்பத்தித் துறை வேகமெடுக்கத் துவங்கியதோடு, காலணி நிறுவனங்களில் பெண் ஊழியர்களை 90 சதவீதம் வரையில் நியமிக்கப் பெரும்பாலான நிறுவனங்கள் முடிவு செய்தது மூலம் தமிழ்நாட்டு வேலைவாய்ப்பு சந்தையில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
தோல் அல்லாத காலணி தயாரிப்பில் உலகின் 4 மிகப்பெரிய நிறுவனங்கள் என்றால் அது Shoetown, Feng Tay, Pou Chen, Hong Fu ஆகியவை தான். இந்த நிறுவனங்கள் பாத்ரூம் செருப்பு முதல், ஸ்போர்ட்ஸ் ஷூ வரையில் தயாரிக்கிறது. தற்போது இந்த 4 தைவான் நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைக்க உள்ளது.
மேலும் பிக் 4 என அழைக்கப்படும் இந்த 4 தைவான் நிறுவனங்கள் Nike, Adidas, Reebok, Puma, Converse, Crocs ஆகிய பிராண்டிகளின் காலணிகளைத் தயாரிக்கிறது.


Click it and Unblock the Notifications