ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் வாரியம், ஜிண்டால் பவர் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள தனது முழு பங்கினை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
ஜிண்டால் பவர் லிமிடெட் நிறுவனத்தின் முழு பங்கினையும், அதாவது 96.42% பங்கினை 3,015 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய, வேர்ல்டோன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தம் தற்போது இறுதி கட்டத்தினை எட்டியுள்ளதாக ஜே.எஸ்.பி.எல்., பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கிராண்ட் தோர்டன் அட்வைசரி நடத்திய ஏல முறையில், வேர்ல்டோன் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் வேர்ல்டோன் நிறுவனம் ஜிண்டாலில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து ஜே.எஸ்.பி.எல்., வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜிண்டால் பவரின் பங்குகளை விற்க, வோர்ல்டோனின் ஒப்பந்த அறிக்கையை ஏற்றுக் கொண்டதாக கூறியுள்ளது. மேலும் இந்த பங்கு விற்பனையானது ஜே.எஸ்.பி.எல்., பங்குதாரர்கள் மற்றும் கடன் வழங்குனர்களிடமிருந்து ஒப்புதல், மற்ற சட்ட ரீதியிலான ஒப்புதல்கள், பிற அனுமதிகள் என அனைத்து ஒப்புதல்களும் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த பங்கு விற்பனை குறித்து ஜே.எஸ்.பி.எல்., கூறுகையில், கடனை குறைத்து, அதன் இந்திய ஸ்டீல் வணிகத்தில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் ஜிண்டால் பவரின் முழு பங்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று என் எஸ் இயில், 1.57% அதிகரித்து 449.90 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதே பி எஸ் இ-யில் 1.82% அதிகரித்து 450.35 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications