சென்னை: பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி, JSW சிமெண்ட் நிறுவனத்தின் ரூ.4,000 கோடி மதிப்புள்ள ஐபிஓ திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் நிதி திரட்டும் நோக்கில் ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டு வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் இந்திய சந்தை மிகவும் சாதகமாக இருப்பது தான்.
மாசம் 10 பெரிய ஐபிஓ வந்தாலும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தயாராக உள்ளனர், ஆனால் ஐபிஓ வெளியிடும் அனைத்து நிறுவனங்களும் இத்தகைய சாதகமான சூழ்நிலை உருவாகிறதா என்றால் நிச்சயம் இல்லை. சிறப்பான நிதி நிலை உடன் தொடர்ந்து வளர்ச்சி அடையும் வர்த்தகத்தைக் கொண்டு இருக்கும் நிறுவனங்களுக்கு ஐபிஓ சிறப்பான தேர்வாக உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், சிமெண்ட் துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் உள்ளது. இதேபோல் பெரிய சிமெண்ட் நிறுவனங்கள் சிறிய சிமெண்ட் நிறுவனங்களை வாங்குவது அதிகரித்துள்ளது. இதனால் சிமெண்ட் துறைக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் காரணத்தால் JSW சிமெண்ட் ஐபிஓ வெளியிட திட்டமிட்டது, ஆனால் இதற்கு செக் வைத்துள்ளது செபி.
SEBI தனது இணையதளத்தில் திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், எவ்விதமான காரணங்களையும் குறிப்பிடாமல், "ஐபிஓ வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தது. பல துறையில் இயங்கி வரும் JSW குரூப்-ன் முக்கிய வர்த்தக பிரிவாக இயங்கி வரும் JSW சிமெண்ட், ஆகஸ்ட் 16 அன்று செபி அமைப்பிடம் ஐபிஓ வெளியிடுவதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்தது.
JSW சிமெண்ட் செபி-யிடம் தாக்கல் செய்த DRHP அறிக்கையின் படி, ரூ.2,000 கோடி மதிப்புள்ள புதிய பங்கு வெளியீடு மற்றும் ரூ.2,000 கோடி மதிப்புள்ள முதலீட்டாளர்களின் பங்கு விற்பனை (OFS) ஆகியவற்றின் மூலம் சுமார் 4000 கோடி ரூபாய் மதிப்பிலான ஐபிஓ வெளியிட தயாரானது JSW சிமெண்ட்.
இந்த ஐபிஓ திட்டத்தில் OFS-இன் கீழ், ஏபி ஏசியா ஆப்பர்சுனிட்டீஸ் ஹோல்டிங்க்ஸ், மற்றும் சினர்ஜி மெட்டல் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்க்ஸ் ஆகியவை தலா ரூ.937.5 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்யும். இந்தியன் ஸ்டேட் வங்கி (SBI) ரூ.125 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்யும்.
JSW சிமெண்ட் நிறுவனம் இந்த ஐபிஓ மூலம் திரட்டும் நிதியில் ரூ.800 கோடி, ராஜஸ்தான் மாநிலத்தில் நாகௌரில் அமைக்கப்பட்டு உள்ள புதிய ஒருங்கிணைந்த சிமெண்ட் தொழிற்சாலை நிறுவுவதற்கு பயன்படுத்தப்படும். இதோடு ரூ.720 கோடி கடன் திருப்பிச் செலுத்துவதற்கும், மீதமுள்ள நிதி பொது நிறுவன நோக்கங்களுக்காக ஒதுக்கப்படும்.
வருடம் சுமார் 19 மில்லியன் டன் உற்பத்தித் திறன் கொண்ட JSW சிமெண்ட், வருடத்திற்கு 60 மில்லியன் டன் உற்பத்தி திறனை அடைய இலக்கு வைத்துள்ளது. JSW சிமெண்ட் தற்போது கர்நாடகாவின் விஜயநகரம், ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியால், மேற்கு வங்காளத்தின் சால்போனி, ஒடிசாவின் ஜஜ்பூர் மற்றும் மகாராஷ்டிராவின் டோல்வி ஆகிய இடங்களில் சிமெண்ட் உற்பத்தி தொழிற்சாலையை வைத்துள்ளது.
கூடுதலாக, JSW சிமெண்ட் தனது துணை நிறுவனமான சிவா சிமெண்ட் மூலம் ஒடிசாவில் ஒரு கிளின்கர் தொழிற்சாலையை இயக்குகிறது. JSW Group, எஃகு, ஆற்றல், கடல்சார் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, B2B மின் வணிகம், ரியல் எஸ்டேட், பெயிண்ட், விளையாட்டு மற்றும் வென்சர் கேப்பிடல் போன்ற பல துறைகளில் வர்த்தகம் செய்து வருகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications