புவனேஸ்வர்: 40,000 கோடி ரூபாய் முதலீட்டில் தங்களது மின்சார வாகன உற்பத்தி ஆலை அமைக்கும் திட்டத்தை ஒடிசாவிலிருந்து மகாராஷ்டிராவுக்கு மாற்றப்படுவதாக வெளியான செய்தி உண்மை இல்லை என ஜேஎஸ்டபிள்யூ குழுமம் விளக்கம் தந்துள்ளது.
சஜன் ஜிண்டால் தலைமையிலான ஜேஎஸ்டபிள்யூ குழுமம் ஒடிசா மாநிலத்தில் 40,000 கோடி ரூபாய் முதலீட்டில் மின்சார வாகனம் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலைகளை அமைக்க இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் இது தொடர்பாக ஒடிசா அரசுக்கும் ஜேஎஸ்டபிள்யூ குழுமத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆனால் திடீரென இந்த ஆலையை ஒடிசாவில் இருந்து மகாராஷ்டிராவுக்கு மாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தில் மூத்த அதிகாரி ரஞ்சன் நாயக் ஒடிசாவில் இருந்து இந்த திட்டத்தை மகாராஷ்டிராவுக்கு மாற்றும் எண்ணம் தங்களுக்கு இல்லை எனவும் இந்த திட்டம் ஒடிசாவில் தான் செயல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஒடிசா மாநில தொழில்துறை அமைச்சரான சம்பத் சந்திரா ஒடிசாவிலிருந்து மின்சார வாகன உற்பத்தி ஆலையை மகாராஷ்டிராவுக்கு இடமாற்றம் செய்வதாக ஜேஎஸ்டபிள்யூ இதுவரை தங்களிடம் எந்த தகவலையும் வழங்கவில்லை எனக் கூறியுள்ளார்.
தற்போதைக்கு பல்வேறு முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதற்கும் அவர்களுக்கு உரிய நிலங்களை கையப் படுத்தி வழங்குவதற்கும் சற்றே தாமதம் ஏற்படுகிறது என்பதை தெரிவித்த அவர், ஜேஎஸ்டபிள்யூ குழுமம் தொடர்ந்து இந்த திட்டத்தை ஒடிசாவிலேயே செயல்படுத்த வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என்றும் இது தொடர்பாக இந்த நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
முன்னதாக ஜூலை மாதத்தில் மகாராஷ்டிரா அரசு ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ கிரீன் மொபிலிட்டி லிமிடெட் நிறுவனம் மின்சார மற்றும் ஹைபிரிட் கார்களையும், லித்தியம் பேட்டரி தயாரிக்கும் ஆலைகளையும் மகாராஷ்டிராவில் நிறுவுவதற்கு அனுமதி அளித்தது.
கிட்டத்தட்ட 42,000 கோடி மதிப்பில் இந்த ஆலைகள் அமையும் என சொல்லப்பட்டது. இதன் காரணமாகவே ஒடிசாவில் இருந்த அமைய இருந்த ஆலையை ஜேஎஸ்டபிள்யூ மகாராஷ்டிராவுக்கு மாற்ற இருப்பதாக தகவல் வெளியானது.
மேலும் ஆலை அமைப்பது தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டு ஆறு மாத காலம் 7 மாதங்கள் முடிவடைந்தும் ஒடிசா மாநில அரசு இந்த நிறுவனத்திற்கு தேவையான நிலத்தை இதுவரை ஒதுக்கீடு செய்யாமல் இருப்பது உள்ளிட்டவை காரணமாக இது போன்ற தகவல் வலம் வந்தது.
இந்த நிலையில்தான் ஆலையை இடமாற்றும் எண்ணம் இல்லை என ஜேஎஸ்டபிள்யூ குழுமம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எனவே அறிவித்த படி ஒடிசாவின் கட்டாக்கில் 25,000 கோடி முதலீட்டில் மின்சார வாகன உற்பத்தி ஆலையும், பாராதிப்பில் 15,000 கோடி முதலீட்டில் பேட்டரி உற்பத்தி ஆலையும் அமைய இருக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications