வோல்ஸ்வேகன் நிறுவன பங்குகளை வாங்கும் JSW.. அடி தூள்.. முதல்ல MG, இப்போ VW..!

உலகளாவிய ஆட்டோமொபைல் சந்தையில் மாபெரும் நிறுவனமாக இருக்கும் வோல்ஸ்வேகன் பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் வேளையில் இந்தியாவில் அதன் வர்த்தகத்தை மேம்படுத்தவும், அதேவேளையில் முதலீடுகளை அதிகரித்து உற்பத்தியை மேம்படுத்தவும் திட்டமிட்டு வருகிறது.

இத்திட்டத்தை செயல்படுத்தும் விதமாக வோல்ஸ்வேகன் AG நிறுவனம் இந்திய வர்த்தகத்தில் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் பங்குகளை JSW குழுமத்திற்கு விற்க திட்டமிட்டு இதற்கான பேச்சுவாத்தையில ஈடுப்பட்டு உள்ளது.

வோல்ஸ்வேகன் நிறுவன பங்குகளை வாங்கும் JSW.. அடி தூள்.. முதல்ல MG, இப்போ VW..!

JSW குழுமம் சமீபத்தில் ஆட்டோமொபைல் துறையில் பெரும் ஆர்வம் காட்டி வரும் சீன SAIC நிறுவனத்திடம் இருந்த MG மோட்டார் இந்திய நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது. இதை தொடர்ந்து தற்போது JSW தனது சொந்த பிராண்டின் கீழ் Jetour T2 மாடல் காரை இந்த தீபாவளிக்கு அறிமுகம் செய்ய தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

இந்த நிலையில் தான் ஜெர்மன் கார் நிறுவனமான வோல்ஸ்வேகன் நிறுவனத்துடன் கூட்டு சேர பங்குகளை வாங்குவதற்காக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

தற்போது நடக்கும் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தால் அடுத்த சில வாரத்தில் ஒப்பந்தம் எட்டப்பட்டு ஸ்கோடா ஆட்டோ வோல்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சஜ்ஜன் ஜிண்டால் தலைமையிலான JSW முதலீடு செய்யும். இதற்காக இரு தரப்பு மூத்த அதிகாரிகளும் சமீபத்தில் சந்தித்து கூட்டணி, பங்கு விற்பனை, அதிகார வரம்பு, இயக்கம், வர்த்தகம் என பல கோணத்தில் விவாதிக்கப்பட்டது.

இப்பேச்சுவார்த்தை அடுத்தக்கட்டத்திற்கு செல்ல வேண்டுமெனில் நிறுவனத்தின் மதிப்பீடு முக்கியமான கேள்வியாக உள்ளது. வோல்ஸ்வேகன் நிறுவனத்திற்கும் அதன் துணை பிராண்ட் வாகனங்களுக்கும் இந்தியாவில் அதிகப்படியான டிமாண்ட் இருந்தாலும் குறைந்த செலவில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்யும் அளவிலான கூட்டணி இதுவரையில் இந்தியாவில் அமையவில்லை, இந்த நிலையில் தான் JSW குரூப் நுழைந்துள்ளது.

இந்தியாவில் 20 வருடமாக இயங்கி வரும் வோல்ஸ்வேகன் நிறுவனத்திற்கு இக்கூட்டணி மிகப்பெரிய வாய்ப்பாக அமையும், காரணம் எலக்ட்ரிக் முதல் IC வாகனங்கள் வரையில் JSW குரூப்-க்கு அனுபவம் உள்ளது, இதேபோல் இக்குழுமம் பல துறையில் இயங்கி வரும் காரணத்தால் போதுமான சப்போர்ட் வோல்ஸ்வேகன் நிறுவனத்திற்கு எளிதாக கிடைக்கும்.

இதேவேளையில் தான் வோல்ஸ்வேகன் ஜெர்மனியில் 4 தொழிற்சாலைகளை மூடவும், 1 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும் திட்டமிட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+