இந்தியாவில் MG Motor நிறுவனத்தின் செயல்பாடுகளை விரிவாக்கம் செய்யச் சீனாவின் SAIC மோட்டார் மற்றும் சஜ்ஜன் ஜிண்டால் தலைமையிலான JSW குரூப் கூட்டணி நிறுவனத்தை உருவாக்கும் அறிவிப்பு வெளியானதில் இருந்து அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
JSW குரூப் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் சென்னையில் இருக்கும் ஃபோர்ட் கார் தொழிற்சாலையை வாங்கத் தீவிரமாக முயற்சி செய்தார், ஆனால் அமெரிக்க ஃபோர்டு நிர்வாகம் தனது முடிவை மாற்றித் தனது புதிய எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்வதாக அறிவித்தது.

இந்த நிலையில் தான் JSW குரூப் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் தனது முதலீட்டை ஒடிசாவில் செய்ய முடிவு செய்தார். இந்த முடிவு குறித்த அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பே வெளியான நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ஜேஎஸ்டபிள்யூ குழுமம் ஒடிசா மாநிலத்தில் கட்டாக் மற்றும் பாரதீப் ஆகிய பகுதிகளில் எலக்ட்ரிக் வாகனம் (EV) மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தி தொழிற்சாலையைத் திட்டத்தை அமைக்க ஒடிசா அரசாங்கத்துடன் ரூ.40,000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் பிப்ரவரி 10ஆம் தேதி கையெழுத்தானது.
எலக்ட்ரிக் வாகனம் மற்றும் அதன் பேட்டரி உற்பத்தி வளாகத்திற்காகக் கட்டாக்கில் ரூ.25,000 கோடி முதலீடு செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள ரூ.15,000 கோடியை பிரதீப்பில் உள்ள EV உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்காக முதலீடு செய்யப்படும்.
இந்த மெகா திட்டத்தில் 50 GWH EV பேட்டரி ஆலை, எலக்ட்ரிக் வாகன உற்பத்தி தளம், லித்தியம் சுத்திகரிப்பு நிலையம், தாமிர உருக்காலை மற்றும் கார்களுக்கான உதிரிபாகங்கள் உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது.
ஜேஎஸ்டபிள்யூ குழுமம் திட்டத்தின் வாயிலாகச் சுமார் 11,000 பேருக்கு வேளைவாய்ப்பு கிடைக்க உள்ளது. ஒடிசா மாநிலத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை JSW குழுமம் உருவாக்க உள்ளது.
இத்திட்டம் மூலம் இம்மாநிலத்தில் MSME துறை வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும், வாகன உதிரிபாக விநியோகச் சங்கிலி மற்றும் சேவைத் துறையில் ஏராளமான வாய்ப்புகளைத் உருவாக்கும் வாய்ப்புகளைக் கொண்டு உள்ளது.
ஜேஎஸ்டபிள்யூ குழுமம் - MG Motors - SAIC மோட்டார் கூட்டணி இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்யவே முக்கிய இலக்காக கொண்டு களமிறங்கியுள்ளது. இந்த நிலையில் இப்பிரிவில் முன்னோடியாக இருக்கும் டாடா மோட்டார்ஸ், மஹிந்திராவுக்கு பெரும் போட்டி வர உள்ளது.


Click it and Unblock the Notifications