பிரபல ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் சொந்தமாக எலக்ட்ரிக் வாகன பிராண்டை அறிமுகம் செய்ய இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆலையை பிரத்யேகமாக எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் என ஜேஎஸ்டபிள்யூ குழுமம் தெரிவித்துள்ளது.
சீனாவை சேர்ந்த எஸ்ஏஐசி மோட்டார் என்ற நிறுவனத்தோடு அண்மையில் தான் ஜேஎஸ்டபிள்யூ குழுமம் 1.5 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான முதலீட்டில் 35 சதவீத பங்குகளை கைப்பற்றி கூட்டு நிறுவனத்திற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஜேஎஸ்டபிள்யூ குழுமம் இந்தியாவில் தங்களுடைய சொந்த எலக்ட்ரிக் வாகன பிராண்டை அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஃபைனான்சியல் டைம்ஸுக்கு இந்த குழுமத்தின் தலைவர் சஜன் ஜிண்டால் அளித்துள்ள பேட்டியில் சீன நிறுவனத்துடன் நாங்கள் கூட்டு ஒப்பந்தம் செய்திருக்கிறோம் ஆனால் வெறுமனே சீன நிறுவன தயாரிப்புகளை விற்பனை செய்து தரக்கூடிய நிறுவனமாக மட்டும் செயல்படாமல் எங்களுக்கென ஒரு தனி எலக்ட்ரிக் வாகன பிராண்டினை உருவாக்கப் போகிறோம் எனக் கூறியுள்ளார்.
இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம் எனக் கூறியுள்ளார். மத்திய அரசு சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கும் தங்களுடைய பொருட்களை விற்பனை செய்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த கட்டுப்பாடுகளை தொடர்ந்து சீனாவை சேர்ந்த எஸ்ஏஐசி என்ற எலக்ட்ரிக் வாகன நிறுவனம் ஜேஎஸ்டபிள்யூ குழுமத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது.
தங்களுடைய தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனை செய்வதற்கு என இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் ஜே எஸ் டபிள்யூ குழுமம் இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக தாங்களே ஒரு புதிய பிராண்டினை உருவாக்க இருப்பதாக கூறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத்தில் உள்ள கார் உற்பத்தி ஆலை எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்காகவே பிரத்யேகமாக ஒதுக்கப்படுகிறது என சஜன் ஜிண்டால் கூறியுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் தான் அவுரங்காபாத் தொழில் பூங்காவில் ஜேஎஸ்டபிள்யூ குழுமம் 27,000 கோடி ரூபாய் முதலீட்டில் வாகன தயாரிப்பு ஆலையை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டியது. இந்த திட்டத்தின் மூலம் அந்த பகுதியில் சுமார் 5,000க்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக கூடும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவில் டாடா மோட்டார்ஸ், மகேந்திரா , ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன. தற்போது இதில் ஜேஎஸ்டபிள்யூ குழுமம் இணைய இருக்கிறது.
ஏற்கனவே ஜேஎஸ்டபிள்யூ குழுமம் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தோடு இணைந்து இந்தியாவில் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. அண்மையில் தான் இந்த நிறுவனத்தின் எலக்ட்ரிக் காரான விண்ட்சார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications