ஒடிசா: ஜேஎஸ்டபிள்யூ குழுமம் தங்களுடைய மின்சார வாகன மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலையை ஒடிசாவிலிருந்து மகாராஷ்டிராவுக்கு இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தி மிண்ட் தளம் இது தொடர்பான செய்தியை பிரத்தியேகமாக வெளியிட்டுள்ளது. ஜேஎஸ்டபிள்யூ குழுமம் 40,000 கோடி ரூபாய் முதலீட்டில் மின்சார வாகன உற்பத்தி மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலையை ஒடிசாவில் நிறுவுவதற்கு முடிவு செய்திருந்தது.

ஆனால் தற்போது ஒடிசாவில் இருந்து அந்த திட்டத்தினை மாற்றி மகாராஷ்டிராவில் நிறுவுவதற்கு முடிவெடுத்து இருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. இது ஒடிசாவை ஆளும் பாஜக அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தேர்தலில் முதன்முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இந்த சூழலில் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே மிகப்பெரிய ஒரு முதலீட்டு திட்டம் மாநிலத்தை விட்டு வெளியேறுவது இந்த அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஜேஎஸ்டபிள்யூ குழுமம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் அல்லது அவுரங்காபாத் பகுதிகளில் மின்சார வாகனம் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கு முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ஜேஎஸ்டபிள்யூ குழுமம் அப்போது ஒடிசாவில் ஆட்சியில் இருந்த பிஜூ ஜனதா தளம் அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன்படி கட்டாக் மற்றும் பேராதிப் ஆகிய பகுதிகளில் மின்சார வாகன மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலைகளை ஜேஎஸ்டபிள்யூ குழுமம் நிறுவுவது என அறிவிக்கப்பட்டது.
மிகப்பெரிய அளவிலான இந்த ஆலைகளுக்காக ஜேஎஸ்டபிள்யூ குழுமம் 40,000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் என்றும் இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் தான் தற்போது இந்த ஆலைகள் ஒடிசாவை விட்டு வெளியேறி மகாராஷ்டிராவில் அமைய இருக்கின்றன. முன்னதாக இந்த அறிவிப்பினை வெளியிட்ட போது ஜேஎஸ்டபிள்யூ குழுமம் சர்வதேச தரம் வாய்ந்த அதிநவீன தொழில்நுட்ப ஆலையாக இந்த ஆலை அமையும் என தெரிவித்திருந்தது.
குறிப்பாக 50 GWH மின்சார வாகன பேட்டரி ஆலையாக இது இருக்கும் என்றும் மிகப்பெரிய அளவிலான எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டங்களை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது . மேலும் தங்களுடைய ஆலையில் தனி நபர் பயன்பாடு மட்டுமல்லாமல் பொது பயன்பாடு மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான மின்சார வாகனங்களும் உற்பத்தி செய்யப்படும் என அறிவித்திருந்தது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications