இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார் இதுதான்.. புதிய சாதனை

இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார் என்ற பெருமை எம்ஜி மோட்டார்ஸின் எலக்ட்ரிக் காரான விண்ட்சாருக்கு (Windsor EV) கிடைத்துள்ளது. இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனம் ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தோடு இணைந்து தன்னுடைய எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது.

அந்த வகையில் அண்மையில் தான் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா கூட்டு நிறுவனம் சார்பாக இந்தியாவில் விண்ட்சார் எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவில் 3,144 விண்ட்சார் எலக்ட்ரிக் காரர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் ஒரே மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் வாகனம் என்ற பெயர் விண்ட்சாருக்கு கிடைத்துள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார் இதுதான்.. புதிய சாதனை

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை விகிதம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது நடப்பு ஆண்டில் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஒப்பிடும் போது 2024 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் 20% கூடுதல் எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்தியாவில் தற்போது எம்ஜி மோட்டார் நிறுவனம் Comet EV, ZS EV மற்றும் Windsor EV மூன்று எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

நவம்பர் மாதத்தில் மட்டும் 6019 கார்களை எம்ஜி மோட்டார் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இந்தியாவில் தற்போது எலக்ட்ரிக் வாகன பிரிவில் மிகப்பெரிய அளவில் செயல்பட்டு வரக்கூடிய நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் இருக்கிறது. 2024 நவம்பர் மாதத்தில் இந்த நிறுவனம் 5202 எலக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது . அதை விட அதிக எண்ணிக்கையில் எம்ஜி மோட்டாரின் கார்கள் விற்பனையாகியுள்ளன.

டாடா மோட்டார்ஸ் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 9 சதவீதம் அதிக கார்களை விற்பனை செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் தற்போது Tiago EV, Tigor EV, Punch EV, Nexon EV , Curvv EV ஆகிய ஐந்து எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. அது தவிர Safari EV, Harrier EV , Sierra EV ஆகிய மூன்று எலக்ட்ரிக் வாகனங்களை கூடிய விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா சார்பாக இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விண்ட்சார் காரினை பொறுத்தவரை 38kWh பேட்டரி பேக் கொண்டு இயங்குகிறது. ஒருமுறை சார்ஜ் செய்யப்பட்டால் இந்த கார் 332 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்யும். இந்த பேட்டரியை டிசி ஃபாஸ்ட் சார்ஜரில் சார்ஜ் செய்யும் போது 55 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் ஆகிவிடும். இந்தியாவில் இந்த கார் 4 நிறங்களில் கிடைக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+