விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் MG WINDSOR EV.. புது புது கார்களை அறிமுகம் செய்ய முடிவு..

குஜராத்: இந்தியாவில் மின்சார தங்கள் நிறுவனத்தின் MG WINDSOR EV மின்சார கார்களுக்கான தேவை அதிகரித்திருப்பதால் உற்பத்தியை அதிகரிக்க எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனமும் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனமும் இணைந்து எம்ஜி விண்ட்சார் (MG WINDSOR EV) என்ற பெயரில் மின்சார வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. எம்ஜி விண்ட்சார் காரை பொறுத்தவரை இந்தியாவில் இதுவரை 15,000 கார்களை உற்பத்தி செய்யப்பட்டுள்ளன . 2024 செப்டம்பரிலிருந்து கடந்த ஜனவரி வரையிலான காலத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட மின்சார கார் என்ற பெருமை MG WINDSOR EV க்கு தான் உண்டு.

விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் MG WINDSOR EV.. புது புது கார்களை அறிமுகம் செய்ய முடிவு..

டாடாவின் நெக்சான் உள்ளிட்ட மின்சார கார்களின் விற்பனையை பின்னுக்கு தள்ளி தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக அதிகளவில் விற்பனையான மின்சார கார் என்ற பெருமையை எம்ஜி விண்ட்சார் பெற்றுள்ளது. டாடா நிறுவன மின்சார கார்களுக்கு கடும் போட்டியாக எம்ஜி விண்ட்சார் மின்சார கார்கள் இருக்கின்றன.

இந்தியாவில் எம்ஜி வின்ட்சார் மின்சார கார்கள் 14 லட்சம் ரூபாயிலிருந்து 16 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது இந்த காருக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளதால் உற்பத்தியை அதிகரிக்க எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் ஹலோல் பகுதியில் செயல்படும் தங்களின் உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்ய உள்ளது.

இந்த ஆலையில் எம்ஜி நிறுவனத்தின் புதிய மின்சார கார்களும் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. தற்போது ஒரு லட்சம் கார்கள் விற்பனை செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் தங்களுடைய குஜராத் ஆலையை ஆண்டுக்கு மூன்று லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஆலையாக மாற்ற எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தங்களின் மின்சார கார்களுக்கு வரவேற்பு இருப்பதால் அடுத்தடுத்த மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. எம்ஜி இந்தியா நிறுவனத்தின் துணை மேலாண் இயக்குனராக செயல்பட்டு வரும் பிஜூ பாலேந்திரன் இந்தியாவில் தற்போது தங்களுடைய எம் ஜி மின்சார வாகனம் வேகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது, இதற்கான தேவை அதிகரித்துள்ளதால் நாங்கள் எங்களுடைய உற்பத்தி ஆலையின் திறனையும் மேம்படுத்தி வருகிறோம் என கூறியுள்ளார்.

தங்களுடைய ஆலையில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் பிப்ரவரியில் உற்பத்தி சற்றே குறையும் ,ஆனால் அது சில மாதங்களில் சரி செய்யப்பட்டு விடும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து நான்கு மாதங்களாக இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட மின்சார கார் என்ற பெருமை ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மின்சார் காருக்கு கிடைத்திருக்கிறது.

விண்ட்சார் மின்சார கார்கள், மிகப்பெரிய டச் ஸ்கிரீன் இன்போடைன்மென்ட் சிஸ்டம் ,பல்வேறு கருவிகளை எளிதாக இணைத்துக் கொள்ளும் வசதிகள், பேனோராமிக் சன்ரூஃப், 135 டிகிரி அளவுக்கு சாயும் திறன் கொண்ட பின்பக்க இருக்கைகள் என்பன உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது. விண்ட்சார் மின்சார கார் 38 kWh பேட்டரி பேக்கினை கொண்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 331 கிலோமீட்டர் வரை பயணம் செய்யும் என இந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+